சேகர் மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.சேகர் தயாரித்துள்ள புதிய படம் ‘நிஜமா நிழலா’. இந்தப் படத்தில் அகில் குமார், மாளவிகா மேனன், குஷால், கவிஞர் நந்தலாலா, அசோக் பாண்டியன், தீபா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – என்.ராஜசேகர், இசை – சுபுசிவா, பாடல்கள் – கபிலன், இளைய கம்பன், படத் தொகுப்பு – வில்சி, நடனம் – நவதீபன், ஸ்ரீசுபாஷ், தம்பி சிவா, ஸ்டண்ட்- மாஸ்டர் மனீஸ்வர்.
தயாரிப்பு – எஸ்.சேகர், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – பி.வி. சீனிவாசன், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய இவர் இயக்கும் முதல் படம் இது.
படம் பற்றி பேசிய இயக்குநர் பி.வி.சீனிவாசன், “தாய், தந்தை சகோதரன் மூவரையும் காப்பாற்ற வேலைக்கு சென்று சம்பாதிக்கும் சராசரி பெண் ஹீரோயின் மாளவிகா மேனன். இவர் நீதி, நேர்மையுடன் நியாயமாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார். இதனால் சமுதாயத்தில் ஏற்படும் இன்னல்கள் அவமானங்கள் போன்ற பிரச்சினைகள். இவற்றை அவர் எதிர்கொண்டு சமாளிக்கும் பக்குவம் ஆகியவற்றை ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் படமாக்கி இருக்கிறோம். சென்னை, பாண்டிச்சேரி, தர்மபுரி, சேலம், ஒகேனக்கல், டெல்லி, குலுமணாலி ஆகிய இடங்களில் ‘நிஜமா நிழலா’ வளர்ந்துள்ளது..” என்றார்.









