full screen background image

அருண் வைத்தியநாதன் இயக்கும் புதிய படம் ‘நிபுணன்’

அருண் வைத்தியநாதன் இயக்கும் புதிய படம் ‘நிபுணன்’

‘அச்சமுண்டு அச்சமுண்டு’, ‘பெருச்சாழி’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் அருண் வைத்தியநாதன் அடுத்து தமிழ், கன்னடம் என்று இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்தப் படத்தில் நடிகர் அர்ஜூன், பிரசன்னா, வைபவ், வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுஹாசினி மணிரத்னம், சுமன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

ரஞ்சித் காளிதாஸ் என்னும் துப்பறியும் நிபுணராக நடிக்கிறார் நடிகர் அர்ஜூன். இவருடன் இணைந்து பணியாற்றும் அதிகாரிகளாக பிரசன்னாவும், வரலட்சுமி சரத்குமாரும் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – அரவிந்த் கிருஷ்ணா, இசை – எஸ்.நவீன், படத் தொகுப்பு – சதீஷ் சூர்யா, கலை – ஆறுசாமி, சண்டை பயிற்சி – அன்பறிவு, சுதேஷ், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, நிகில் முருகன். Fashion Film Factory சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம், அருண் வைத்தியநாதன் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

தமிழில் ‘நிபுணன்’ என்றும் கன்னடத்தில் ‘விஸ்மயா’ என்றும் பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

படம் பற்றி பேசிய இயக்குநர் அருண் வைத்தியநாதன், “இந்தப் படத்தில் ஆக்சன் கிங் அர்ஜூன் படு ஸ்மார்ட்டாக சால்ட்  அண்ட் பெப்பர் தோற்றத்தில் வசீகரமாக இருப்பார். இதுவரையில் அவர் ஏற்காத ஒரு புதிய கேரக்டரில் இந்தப் படத்தில் நடிக்கிறார். படம் பரபரப்பான ஆக்சன் காட்சிகளோடும், திரில்லர் காட்சிகளோடும் தயாராகி வருகிறது..” என்றார்.

Our Score