full screen background image

‘நெற்றிக்கண்’ திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது

‘நெற்றிக்கண்’ திரைப்படம் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது

லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாரா நடித்து முடித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்றைக்கு வெளியாகியுள்ளது.

நயன்தாரா, தமிழில் தொடர்ந்து மிகவும் வித்தியாசமான கதைக் களம் கொண்ட படங்களையும், கதையின் நாயகியாகவும் நடிப்பதில் ஆர்வம் கட்டி வருகிறார்.

அந்த வகையில் நயன்தாராவின் நடிப்பில் ‘நெற்றிக்கண்’ என்ற திரைப்படம் உருவாகியிருக்கிறது. நயன்தாரா கண் தெரியாதவராக நடித்திருக்கும் இப்படம், சைக்கோ த்ரில்லர் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை அவரது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவன் ‘ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம்’ மூலம் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் டீஸர் நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான நிலையில், தற்போது, இந்தப் படத்தின் வெளியீடு குறித்த தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.

ரவுடி பிச்சர்ஸ் நிறுவனம்’ சற்று முன் டிவீட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ திரைப்படம், ‘ஹாட் ஸ்டார்’ ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நயன்தாரா நடித்த, ‘மூக்குத்தி’ அம்மன் திரைப்படமும் ‘ஹாட் ஸ்டார்’ ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், அதை தொடர்ந்து தற்போது இவர் நடித்துள்ள இந்த நெற்றிக்கண் படமும் ஓடிடியில் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது நயன்தாராவின் ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. 

‘நெற்றிக்கண்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் தேதியும் விரைவில் அறிவிக்கப்படுமாம்.

 
Our Score