full screen background image

“இந்தக் கேரக்டரை சூர்யாதான் பண்ண முடியும்” – இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி

“இந்தக் கேரக்டரை சூர்யாதான் பண்ண முடியும்” – இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பேட்டி

Netflix OTT தளத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் ஆந்தாலஜி திரைப்படமான நவரசா’  படத்தை,  Madras Talkies மற்றும் Qube Cinema Technologies ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

மனித உணர்வுகளான  கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை மையமாக கொண்டு, ஒன்பது பகுதிகளாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்தப் பட வரிசையில் ஒரு கதையான ‘கிடார் கம்பியின் மேலே நின்று’ பகுதியை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்.

‘காதல்’ உணர்வினை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், கமல்’ என்னும் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவும், ‘நேத்ரா’ என்னும் கதாபாத்திரத்தில் நடிகை ப்ரயகா ரோஸ் மார்டினும் நடித்துள்ளனர்.

இந்த கதையின் முதல் போஸ்டர் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. வழக்கம்போல சமூக வலைத்தளங்களில் டிரெண்ட்டிங்காகவும் ஆனது.

இந்தத் தொடரில் சூரியா நடித்த கதாபாத்திரம் குறித்து  இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறுகையில், “இந்த கதாபாத்திரத்திற்கு  நடிகர் சூர்யாதான்  எனது முதல் தேர்வாக இருந்தார்.  இப்பாத்திரத்தில் வேறு யாரும் நடிப்பதை நான் கற்பனைகூட செய்யவில்லை.

அவருடன் இணைந்து பணியாற்ற  மிக நீண்ட காலமாக காத்திருக்கிறேன். இந்தப் படம் அதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. திரையிலும் அது மிக அழகாக வெளிப்பட்டுள்ளது.

கமலின் வாழ்க்கையில் நேத்ரா புத்தம் புதிய சுவாச காற்றாக, வசந்தம் போல வருகிறாள். அவளின் குணம்  நம் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் வகையிலானது.  ப்ரயகா ரோஸ் மார்ட்டின் இந்த கதாபாத்திரத்தை மிக அற்புதமான முறையில் நடித்துள்ளார்.

அவர்  பேசும் விதம், தோற்றமளிக்கும் விதம், தலைமுடியுடன் விளையாடும் விதம், இந்த குணங்கள் வெறும்  உடல் ரீதியானவை அல்ல. இதெல்லாம் கதாப்பாத்திரத்தின் மனதோடு இணைந்தவை. அவர் இசையைப் பற்றி பேசியவிதமும்  கதாபாத்திரத்துடன்  இணைந்து  கொண்ட  விதமும்  மிகுந்த ஆச்சர்யம் தருவதாக இருந்தது.  திரையில் அது எப்படி வெளிப்படுகிறது என்பதை காண நானஉம் ஆவலுடன் காத்திருக்கிறேன்…” என்றார்.

தமிழ் திரையுலகின் 40 முன்னணி நடிகர்கள், ஆளுமை மிக்க இயக்குநர்கள், மிகச் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோர் இணைந்து பணியாற்றியிருக்கும் இந்த நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6-ம் தேதியன்று 190 நாடுகளில் வெளியாகிறது.

 
Our Score