முதல் திரைப்படமான ‘ஆரோகண’த்தில் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்த, நடிகையும் இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் இயக்கும் இரண்டாவது திரைப்படம் ‘நெருங்கி வா முத்தமிடாதே’.
ஏ.வீ.ஏ. நிறுவனம் சார்பில் இந்த திரைப்படத்தை ஏ.வீ.அனூப் தயாரிக்கிறார். ஷபீர் கலரக்கல் கதை நாயகனாகவும் பியா பாஜ்பாய் கதாநாயகியாகவும் நடிக்க, கன்னட ‘லூசியா’ புகழ் சுருதி ஹரிஹரன், தம்பி ராமையா, ஒய்.ஜி.மகேந்திரன், அம்பிகா, ஏ.எல்.அழகப்பன், தலைவாசல் விஜய் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேசிய பெட்ரோல் தட்டுப்பாடு என்பதை மையக் கருத்தாக கொண்டு நகரும் இந்த ‘நெருங்கி வா முத்தமிடாதே’ திரைப்படத்தின் உள்ளே, நான்கு வாழ்க்கைக் கதைகள் பின்னி பிணைந்திருக்கின்றன. உணர்வுகளுக்கும், உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பதாக திரைக்கதை அமைந்துள்ளது.
ஒளிப்பதிவு – வினோத் பாரதி
படத் தொகுப்பு – தேசிய விருது பெற்ற சாபு ஜோசப்
இசை – மேட்லி பிளூஸ்
பாடல்கள் – நா.முத்துக்குமார்
பாடியவர்கள் – ஷங்கர் மகாதேவன், சின்மயி, நந்தினி ஸ்ரீகர், மில்லி நாயர்
சண்டை பயிற்சி- மிரட்டல் செல்வா
கலை இயக்கம் – ராஜா, குமார்
மக்கள் தொடர்பு – நிகில்
தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால், கும்பகோணம், நெய்வேலி, மலேசியா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பாடல் காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்கப்பட வேண்டியுள்ளது. விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.