full screen background image

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் ஹீரோயின் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கம்..!

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் ஹீரோயின் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கம்..!

இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படத்தின் புதிய திருத்தம் செய்யப்பட்ட பிரதி, இன்று முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்படுகிறது.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படம் கடந்த நவம்பர் 10 வெள்ளிக்கிழமை அன்று வெளியாகி, திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்போது விமர்சகர்கள், சினிமா ரசிகர்களின் கருத்துகளை கருத்தில் கொண்டு படத்தின் நாயகியான மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கியிருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.

suseendhiran-1

இது பற்றி இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, “இப்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் சுமார் இருபது நிமிட காட்சிகளை நாங்களே நீக்கியுள்ளோம்.

கதாநாயகி மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளது. படத்தில் இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது.

‘நெஞ்சில் துணிவிருந்தால்’ திரைப்படத்தின் திருத்தம் செய்யப்பட்ட புதிய பிரதி, இன்று நண்பகல் 12 மணி காட்சி முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டு உள்ளது. 

நாங்கள் 15 நாட்கள் மெஹ்ரீன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். மெஹ்ரீன் நடித்த காட்சிகளை இப்போது படத்தின் தன்மை கருதி, சூழ்நிலை காரணமாக நீக்கியிருக்கிறோம். இதற்காக நான் அவரிடம் மன்னிப்பு  கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.

Our Score