‘பிகில்’ நாயகி காயத்ரியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நீயும் நானும்’ வீடியோ ஆல்பம்

‘பிகில்’ நாயகி காயத்ரியின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நீயும் நானும்’ வீடியோ ஆல்பம்

இசையமைப்பாளர் ஜான் A.அலெக்ஸ்சிஸ் இசையமைப்பில் வெளிவந்திருக்கும் சிங்கிள் பாடல் ‘நீயும் நானும்’.

இதில் பிகில்’ படத்தில் நடித்த காயத்ரி  நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக ஜான் ஹாஜி நடித்திருக்கிறார். ஆலுப் ராஜூ பாடியிருக்கிறார். பாடல வரிகளை கவிஞர் கபிலன் எழுதியிருக்கிறார்.

இந்த சிங்கிள் பாடலை தயாரித்து, இசையமைத்திருக்கும் ஜான் A.அலெக்ஸ்சிஸ் ‘பழகிய நாட்கள்’ என்னும் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ்ச் சினிமாவில் அறிமுகமாகியவர். மேற்கத்திய நாடுகளில் இசை பயின்றவர். தமிழ் மீதும், தமிழ் இசை மீதும் பற்று கொண்டவர். தற்போது மூன்று திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்தத் தனிப் பாடல்கள் தற்போது அதிகரித்து வருவது பற்றி இசையமைப்பாளர் ஜான் ஏ.அலெக்ஸிஸ் பேசம்போது, “தனியிசை பாடல்கள் மேற்கத்திய நாடுகளில் பிரபலம் ஆனதுபோல தமிழ் இசைப் பாடல்களும் தற்பொழுது பிரபலமாகி வருவது வரவேற்கத்தக்கது.

தமிழ் இசையின் இனிமையும், தமிழகத்தின் பாரம்பரியமான வாத்தியக் கருவிகளின் சிறப்பையும் உலகம் மெல்ல உள்வாங்க ஆரம்பித்திருக்கிறது. விரைவில் தமிழ் இசைப் பாடல்களுக்கு உலக அரங்கில் தனியிடம் கிடைக்கும். தொடர்ந்து தனியிசைப் பாடல்கள் இசையமைப்பதிலும் கவனம் செலுத்துவேன்…” என்றார்.

 
Our Score