full screen background image

நயன்தாரா நடிக்கும் புதிய த்ரில்லர் திரைப்படம்

நயன்தாரா நடிக்கும் புதிய த்ரில்லர் திரைப்படம்

‘நான் அவன் இல்லை’, ‘அஞ்சாதே’, ‘பாண்டி’, ‘மீகாமன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை அளித்த தயாரிப்பு நிறுவனமான நேமிசந்த் ஜபக்கிற்க்காக V.ஹித்தேஷ் ஜபக் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தினை முதல் பிரதி அடிப்படையில் இயக்குநர் சற்குணத்தின்  தயாரிப்பு நிறுவனமான சற்குணம் சினிமாஸ் தயாரிக்கிறது.

இப்படத்தை இயக்குநர் சற்குணமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தாஸ் ராமசாமி எழுதி இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகை நயன்தாரா முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். இப்படத்தின் கதை கதாநாயகியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.

படத்தின் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் மேற்கொள்கிறார். விவேக் மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

படத்தொகுப்பு – கோபி கிருஷ்ணா, சண்டை பயிற்சி – திலிப் சுப்புராயன், நடனம் – பாபி ஆண்டனி, உடை அலங்காரம் – அனுவர்த்தன் (நயன்தாரா), உடைகள் – நட்ராஜ், ஒப்பனை – சசிகுமார், ஸ்டில்ஸ் – மூர்த்தி, மக்கள் தொடர்பு – நிகில்.

நகைச்சுவை கலந்த திகிலூட்டும் க்ரைம் திரில்லராக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் எடுக்கப்படவுள்ளது.

இம்மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளது.

Our Score