full screen background image

இயக்குநர் சற்குணம் தயாரிக்கும் புதிய படத்தில் நயன்தாராதான் ஹீரோயின்..!

இயக்குநர் சற்குணம் தயாரிக்கும் புதிய படத்தில் நயன்தாராதான் ஹீரோயின்..!

இயக்குநர் சற்குணம் தயாரிக்கும் புதிய படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கவிருக்கிறார்.

sargunam-1

இயக்குநர் ஏ.சற்குணம் தனது ‘A Sarkunam Cinemaz’ என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார். சற்குணம் தயாரித்த முதல் படமான ‘மஞ்சப் பை’ திரைப்படத்தை அவரது உதவியாளர் ராகவன் இயக்கினார். இப்படம் பெரும் வெற்றியை தேடித் தந்தது.

இதைத் தொடர்ந்து இப்போது தனது அடுத்தப் படத்தையும் துவக்கியுள்ளார் இயக்குநர் சற்குணம். இந்தப் புதிய படத்தில் நடிகை நயன்தாரா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்.

இந்தப் படத்தின் கதை, கதாநாயகியை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளதாம். அதனால் நயன்தாரா மாதிரியான சூப்பர் ஸ்டாரினி நடித்தால் நன்றாக இருக்குமே என்றெண்ணி அவரிடத்தில் கதை சொல்லி ஓகே வாங்கியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தை சற்குணம் இயக்கவில்லை. ஆனால், அவர் இயக்கிய ‘களவாணி’ முதல் ‘சண்டிவீரன்’ படங்கள்வரையிலும் அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய, தாஸ் ராமசாமி என்பவர் இந்தப் படத்திற்கு கதை எழுதி இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் மற்ற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தப் படம் திகிலூட்டும் கிரைம் திரில்லராகவும் நகைச்சுவை கலந்த வகையிலும் திரைக்கதையில் உருவாகவுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் கவரும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் இப்படம் எடுக்கப்படவுள்ளதாம்.

Our Score