சந்தானம், மிர்ச்சி சிவா, மிர்ச்சி செந்தில், சிவகார்த்திகேயன் வரிசையில் சின்னத்திரையிலிருந்து பெரியதிரைக்கு வந்து நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகர் மா.கா.பா. ஆனந்த்.
ஏற்கனவே ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தில் நடித்துள்ள மா.கா.பா. ஆனந்த் அடுத்து தனி கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘நவரசத் திலகம்’.
‘பர்மா’ படத்தின தயாரிப்பாளரான ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடித்திருக்கிறார். மற்றும் கருணாகரன், ஜெயபிரகாஷ், இளவரசு, பாவா லட்சுமணன், மீரா கிருஷ்ணன், லஷ்மி, மகாதேவன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
வித்தியாசமான வேடமொன்றில், ‘இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ போன்ற படங்களின் இசையமைப்பாளர் சித்தார்த் விபின் நடித்திருக்கிறார்.
ஒளிப்பதிவு – ரமேஷா
இசை – சித்தார்த் விபின்
பாடல்கள் – யுகபாரதி, மோகன்ராஜ்
கலை – சீனு
நடனம் – தினேஷ்
ஸ்டன்ட் – மகேஷ்
இணை தயாரிப்பு – கே.ஜெயச்சந்திரன் ராவ்
தயாரிப்பு – சுதர்சன வெம்புட்டி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – காம்ரன்
இவர் ராஜ்கபூர், பூபதிபாண்டியன், எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.
‘நவரசத் திலகம்’ படம் பற்றி இயக்குநர் காம்ரன் பேசும்போது, “நம்மைச் சுற்றிலும் நண்பர்கள் என்கிற பெயரில் சில ‘நவரசத் திலக’ங்கள் இருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு நண்பனின் வாழ்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் இந்த படத்தின் கதை!
இதை 90 சதவிகிதம் காமெடி கலந்து பொழுதுபோக்கு படமாக உருவாக்கியிருக்கிறோம். பொள்ளாச்சியில் 60 சதவீதம் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்து விட்டது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு திருச்சி, கும்பகோணம் ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைய இருக்கிறது…” என்றார்.