full screen background image

‘நட்பதிகாரம்-79’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

‘நட்பதிகாரம்-79’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

‘கண்ணெதிரே தோன்றினாள்’ இயக்குநர் ரவிச்சந்திரனின் புதிய படமான ‘நட்பதிகாரம் 79’ படத்திற்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இந்தப் படத்தை ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில்  D.ரவிகுமார் தயாரித்திருக்கிறார். கதாநாயகனாக ராஜ் பரத் நடித்திருக்கிறார். இவர் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, படத்தில் நடித்தவர். இன்னொரு  நாயனாக ‘வல்லினம்’ படத்தில் நடித்த அம்ஜத்கான் நடித்திருக்கிறார்.

கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடித்திருக்கிறார்கள்.  M.S.பாஸ்கர்,  பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள். ‘கலக்கப் போவது யாரு’ விக்னேஷ் கார்த்திக் இந்தப் படத்தின் மூலமாக காமெடியனாக அறிமுகம் ஆகிறார்.

ஒளிப்பதிவு – R.B.குருதேவ், இசை – தீபக் நிலம்பூர், எடிட்டிங் – சாபு ஜோசப். பாடல்கள் – கபிலன், ரவிச்சந்திரன், நடனம்-ராஜூ சுந்தரம், பிருந்தா, விஜி, தயாரிப்பு  –     D.ரவிகுமார். கதை, திரைக்கதை, வசனம் இயக்கம்  –  ரவிச்சந்திரன்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் ரவிச்சந்திரன், ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘மஜ்னு’, ‘சந்தித்த வேளை’, ‘உற்சாகம்’ படங்களை தொடர்ந்து நான் இயக்கும் ஐந்தாவது படம் இது. ‘கண்ணெதிரே தோன்றினாள்’ நட்பையும் காதலையும் சொன்னவிதத்தில் பெரிய வெற்றி அடைந்தது. அதே போல் இந்த ‘நட்பதிகாரம்-79’ படத்தில் நட்பு, காதல், குடும்ப உறவுகள் பற்றியும் வேறு ஒரு   பரிமாணத்தில் சொல்லி இருக்கிறேன்.  படத்திற்கு சென்சாரில் ‘U’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையே படத்திற்குக் கிடைத்துள்ள முதல் வெற்றியாக கருதுகிறேன். படம் அடுத்த மாதம் உலகம் முழுவதும் வெளியாகிறது..” என்றார்.

Our Score