full screen background image

பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் ஆகஸ்ட் 31-ல் வெளியாகிறது

பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் ஆகஸ்ட் 31-ல் வெளியாகிறது

இயக்குநர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு பிறகு ‘நட்சத்திரம் நகர்கிறது ன்னும் படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், கலையரசன், துஷாரா, ஹரி, ஷபீர், வினோத், மைம் கோபி உள்ளிட்டவர்களோடு புதுமுகங்கள் பலரும் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை யாழி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன், மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – கிஷோர் குமார், இசை – டென்மா, படத் தொகுப்பு – செல்வா R.K., கலை இயக்கம் – ரகு, நடன இயக்கம் – சாண்டி, சண்டைப் பயிற்சி இயக்கம் – ஸ்டன்னர் சாம்.

வித்தியாசமான கதைக் கருவில் உருவாகியிருக்கும் இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியன்று தியேட்டரில் வெளியாகவிருக்கிறது.

Our Score