full screen background image

காதல் திருமணங்களால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வரும் ‘நண்பா’ திரைப்படம்

காதல் திருமணங்களால் ஏற்படும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வரும் ‘நண்பா’ திரைப்படம்

காதல் திருமணம் செய்ய முயலும் மூன்று ஜோடிகள் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றிப் பேச வரும் திரைப்படம் நண்பா’..!

தயாரிப்பாளர் டி.சிவபெருமாள் தனது சிவஞானம் பிலிம் புரொடக்சன் நிறுவனத்தின் சார்பில் இந்த நண்பா’ படத்தைத் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் புதுமுகங்கள் பிரபு – மீனா, ஆகியோருடன் கல்லூரி வினோத், சிசர் மனோகர், மெளலி, ஜானகி, பாபி, கற்பகம், ஜோதிநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். 

படத் தொகுப்பு – துரைராஜ், ஒளிப்பதிவு – ஜெயம், இசை – டென்னிஸ் வல்லபன், சண்டை இயக்கம் – ஆர்.என்.முரளி, நடன இயக்கம் – பவர் சிவா, பாடல்கள் -இளைய கம்பன், மக்கள் தொடர்பு – விஜயமுரளி, கிளாமர் சத்யா, தயாரிப்பு –டி.சிவபெருமாள், கதை திரைக்கதை, வசனம், இயக்கம் – கே.வி.முகி.

இணை பிரியாத மூன்று நண்பர்கள் சாதியைத் தாண்டி, மதத்தைத் தாண்டி, பணத்தைத் தாண்டி மூன்று பெண்களை காதலிக்கிறார்கள். திருமணம் செய்ய முயலும் அந்த மூன்று காதல் ஜோடிகளும் சந்திக்கும் வாழ்வியல் பிரச்சனைகளிலிருந்து தப்பினார்களா..? இந்தச் சமூகம் அவர்களை என்ன செய்தது..? என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

இந்த நண்பா’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Our Score