full screen background image

பட விநியோகத் தொழிலில் இறங்குகிறது லிப்ரா புரொடெக்சன்ஸ்..!

பட விநியோகத் தொழிலில் இறங்குகிறது லிப்ரா புரொடெக்சன்ஸ்..!

லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனம் தான் தயாரித்த முதல் படமான நளனும் நந்தினியும் படத்தினை அடுத்த மாதம் 11-ம் தேதி திரைக்குக் கொண்டு வருகிறது..!

சுவிட்சர்லாந்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றும் ரவீந்தர் சந்திரசேகர் என்ற இளைஞர் சினிமா துறையின் மீதிருந்த ஆர்வம் காரணமாய் 3 ஆண்டுகளுக்கு முன்பாய் தமிழ்ச் சினிமாவில் கால் பதித்தார்.

முதலில் இந்தப் படத்துக்குத்தான் பூஜை போட்டார். இதனைத் தொடர்ந்து சுட்ட கதை படத்தையும் தயாரித்தார். அந்தப் படம் சென்ற ஆண்டு வெளியாகி மின்னல் வேகத்தில் ஓடி மறைந்தது. அதற்குப் பிறகும் சில படங்களுக்கு பூஜை போட்டு மாதம் ஒரு படம் ரிலீஸ் செய்யப் போவதாய் அறிவித்தார்.

பெண் இயக்குநர் நந்தினியின் இயக்கத்தில் கொலை நோக்குப் பார்வை என்ற படத்தையும் தயாரித்து வந்தார். இந்தப் படம் தற்போது பாதி தயாரிப்பில் இருக்கும் நிலையிலேயே நந்தினி இந்த பிராஜெக்ட்டில் இருந்து விலகிக் கொள்ள.. படம் தொங்கலில் உள்ளது..

இந்த நிலைமையில் இந்த நிறுவனம் தயாரித்த முதல் படமான நளனும் நந்தினியும் தயாராகி 1 வருடத்திற்கு மேலாகியும் திரைக்கு வந்தபாடில்லை. இப்போதுதான் இதோ அதோ என்று இழுத்து அடுத்த மாதம் 11-ம் தேதி வெளியிடப் போவதாக லிப்ரா புரொடெக்சன்ஸ் நிறுவனம் உறுதியாகத் தெரிவித்துள்ளது. மிகப் பெரிய சந்தோஷம்..

கூடவே இன்னொரு பகீர் விஷயத்தையும் தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர். தான் இனிமேல் மாதம் தோறும் ஒரு படத்தை வாங்கி விநியோகம் செய்யப் போவதாகச் சொல்லியுள்ளார்.

இது எதுக்கு என்றுதான் தெரியவில்லை.!!!

Our Score