சென்னை மக்களின் வாழ்வியலை யதார்த்தமாகவும், சுவாரஸ்யமாகவும் சொல்லும் படம் ‘நகர்வலம்’.
ரெட் கார்பெட் நிறுவனத்தின் சார்பாக எம். நடராஜன், என். ரமேஷ் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கும் இந்த ‘நகர்வலம்’ திரைப்படத்தில், கதையின் நாயகனாக ‘காதல் சொல்ல வந்தேன்’ படத்தின் ஹீரோவான பாலாஜி நடித்திருக்கிறார். ஹீரோயினாக புதுமுக நாயகி தீக்ஷிதா நடித்திருக்கிறார். மேலும் பாலா, யோகி பாபு , ‘நமோ’ நாராயணன். ‘வேட்டை’ முத்துக்குமார், இயக்குனர் மாரிமுத்து, ரிந்து ரவி, ‘அட்டக்கத்தி’ வேலு , ‘மதுபானக்கடை’ ரவி ஆகியோருடன் பல புதுமுகங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
படத்தின் இயக்குனர் மார்க்ஸ், இத்திரைப்படத்தை பற்றிச் சொல்கையில், “சென்னை நகரில், குடிநீர் விநியோகிக்கும் மெட்ரோ வாட்டர் லாரி டிரைவரான நாயகன், பல ஏரியாகளுக்கு குடிநீர் கொண்டு செல்கையில் ஓர் ஏரியாவின் அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் உண்டாகும் காதலும், அதனால் ஏற்படும் பிரச்சனைகளும்தான் கதை. அதனை சென்னை மக்களின் வாழ்வியலுடன் கலந்து யதார்த்தமாகவும், சுவாரஸ்யமாகவும் இருக்கும்வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது..” என்றார் .
மேலும், இதில் சென்னை பூர்விக மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் ஒரு கானா பாடலை, ‘கானா புகழ்’ இசையமைப்பாளர் தேவா அவர்கள் பாடியுள்ளார்.
ஒளிப்பதிவு – தமிழ் தென்றல்
இசை – பவன்
படத்தொகுப்பு – மணிகண்ட பாலாஜி
கலை – தேவா
சண்டை பயிற்சி – ‘ஃபயர்’ கார்த்திக்
நடனம் – கல்யாண், நந்தா, விமல் ராஜ்
பாடல்கள் – மோகன் ராஜன்.
சென்னை நகரின் நெருக்கடி மிகுந்த பகுதிகளான அண்ணா நகர், சைதாப்பேட்டை, கே. கே. நகர், கண்ணகி நகர் குடுயிருப்பு போன்ற இடங்களில் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.