பரத்தின் ‘நடுவன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது

பரத்தின் ‘நடுவன்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது

Cue Entertainment Production சார்பில் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் Lucky Chhajer தயாரித்துள்ள படம் ‘நடுவன்’.

ஆச்சர்யங்கள் மற்றும் திருப்பங்கள் நிறைந்த இந்த திரில் திரைப்படத்தில் பரத், அபர்ணா வினோத் இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளார்.

மேலும் கோகுல் ஆனந்த், யோக் ஜெய்பீ, ஜார்ஜ், பாலா, தசராதி குரு, கார்த்திக், சுரேஷ் ராஜ், ஆராத்யா ்ரீ மற்றும் பல நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். ஷரங் இப்படத்தினை எழுதி, இயக்குகிறார்.

‘நடுவன்’ என்பதற்கு மத்தியத் தர வாழ்க்கை வாழும் ஒருவன்’ எனப் பொருள். வஞ்சம் மற்றும் அறியாமையின் இடையில் சிக்கி ஏமாறும் முதன்மை கதாபாத்திரமான பரத்தின் பயணம்தான் இப்படத்தின் கரு.

ஏமாற்றத்தின் பின்னணியில் அவர் தனது அறியாமையை உணர்ந்து தன்னை ஏமாற்றுபவர்கள் ஏன் அந்த முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதை அறிய முயலும் ஒரு இளைஞனின் கதையை திருப்பங்கள் நிறைந்த திரில் பயணமாக நடுவனில் படமாக்கியுள்ளனர்.

‘நடுவன்’ படத்தின் முதல் பாடலாக, தரண் குமாரின் இசையில் வெளியான “காலை” பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லரை, சோனி லைவ் தனது தளத்தில் வெளியிட்டுள்ளது.

Our Score