தினேஷ் – தீப்தி திவேஸ் நடிக்கும் ‘நானும் சிங்கிள்தான்’ திரைப்படம்

தினேஷ் – தீப்தி திவேஸ் நடிக்கும் ‘நானும் சிங்கிள்தான்’ திரைப்படம்

THREE IS A COMPANY  என்ற பட நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர்கள் ஜெயகுமார், ‘புன்னகை பூ’ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள்தான்.’

இந்தப் படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் ‘மொட்டை’ ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – டேவிட் ஆனந்த்ராஜ், இசை – ஹித்தேஷ் மஞ்சுநாத், பாடல்கள் – கபிலன் வைரமுத்து, சண்டை இயக்கம் – கனல் கண்ணன், கலை இயக்கம் – ஆண்டனி ஜோசப், படத் தொகுப்பு – ஆதித்யன், நடன இயக்கம் – அபீப் உஷேன், இணை தயாரிப்பு – ஜெயகுமார், ‘புன்னகை பூ’ கீதா, தயாரிப்பு –  THREE IS A COMPANY, எழுத்து, இயக்கம் – கோபி.

naanum singlethaan movie stills

தயாரிப்பாளர் ஜெயக்குமார் படம் பற்றிப் பேசும்போது, “இது முழுக்க, முழுக்க காதல் கலந்த கமர்ஷியல் படம். இந்தக் கதைக்கு வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநரான கோபி. ஒரு புது மாதிரியான ஒரு கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்தில் உள்ளது. அது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக நிச்சயம் இருக்கும்.

லண்டனில் வசிக்கும் தமிழ் தாதா கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் காமெடியில் கலக்கி இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு அருமையான காமெடி விருந்தாக இருக்கும். தற்போது படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. அக்டோபர் முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்..” என்றார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் லண்டன், மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் நடைபெற்றுள்ளது.

 

Our Score