‘லண்டன் லவ் குரு’வாக நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன்..!

‘லண்டன் லவ் குரு’வாக நடித்திருக்கும் மொட்டை ராஜேந்திரன்..!

THREE IS A COMPANY  என்ற பட நிறுவனம் மற்றும் தயாரிப்பாளர்கள் ஜெயக்குமார், ‘புன்னகை பூ’ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள்தான்.’

இந்தப் படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் ‘மொட்டை’ ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – டேவிட் ஆனந்த்ராஜ், இசை – ஹித்தேஷ் மஞ்சுநாத், பாடல்கள் – கபிலன் வைரமுத்து, சண்டை இயக்கம் – கனல் கண்ணன், கலை இயக்கம் – ஆண்டனி ஜோசப், படத் தொகுப்பு – ஆதித்யன், நடன இயக்கம் – அபீப் உஷேன், இணை தயாரிப்பு – ஜெயகுமார், ‘புன்னகை பூ’ கீதா, தயாரிப்பு –  THREE IS A COMPANY, எழுத்து, இயக்கம் – ரா.கோபி.

தயாரிப்பாளர் ஜெயக்குமார் படம் பற்றிப் பேசும்போது, “இது முழுக்க, முழுக்க காதல் கலந்த கமர்ஷியல் படம். இந்தக் கதைக்கு வித்தியாசமான திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநரான கோபி.

மொட்டை ராஜேந்திரன் இதுவரைக்கும்  வில்லனாக,  காமெடியனாக நடித்திருந்தாலும், இந்தப் படத்தில் ஒரு ரொமாண்டிக்  காமெடியனாக  நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தன் குரலுக்கு என ஒரு ரசிகர் கூட்டத்தைக் கையில் வைத்திருக்கும் மொட்டை ராஜேந்திரன் இந்தப் படத்தில் நாயகன்  தினேஷூடன்  சேர்ந்து காமெடியில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். 

லண்டன் வாழ் தமிழராக ஒரு லோக்கல் FM  ஸ்டேஷனில்  ஆர்.ஜே.வாக மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். ‘MR.LOVE’  என்ற  பெயரில்  காதலர்களுக்கு  டிப்ஸ்  கொடுத்து உதவும் ‘லண்டன் லவ் குரு’ இவர்தான்.

காதலை சேர்த்து வைப்பதற்கு, காதல் தோல்வியில் விரக்தி அடைந்தவர்களுக்கு, முக்கியமாக சிங்கிளாக இருப்பவர்களை மிங்கிளாக  மாற்ற   ஐடியாக்களை  கொடுக்கும் ‘MR.LOVE GURU’-வாக இந்தப் படத்தில் மொட்டை ராஜேந்திரன் பிரமாதமாக நடித்திருக்கிறார்…” என்றார்.

Our Score