full screen background image

ஜெய் ஆகாஷின் ‘நான் யார்’ திரைப்படம் மே 6-ம் தேதி ரிலீஸ்..!

ஜெய் ஆகாஷின் ‘நான் யார்’ திரைப்படம் மே 6-ம் தேதி ரிலீஸ்..!

ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் மற்றும் ராகம் புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நான் யார்?’

இந்தப் படத்தில் நடிகர் ஜெய் ஆகாஷ் நாயகனாகவும் லண்டன் மாடல் அழகி பிரியா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சுஜித், சுமன் ஷெட்டி, ஜான்சன், Y.இந்து, சோனியா சர்மா, தேவந்தி, நகினா, ராதா, எட்வர்ட் ஒயிட், கிரேக் தாமஸ்  மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு : தேவராஜ் / ஷான் சாயு, கதை – திரைக்கதை : ஜெய் ஆகாஷ், வசனம் – இயக்கம் : என்.ராதா, இசை : U.K முரளி, பாடல்கள் : கபிலன், எடிட்டிங் : B .பிரேம், மக்கள் தொடர்பு : S.செல்வரகு, நிர்வாகத் தயாரிப்பு – எஸ்.ஜான்சன்.

கம்ப்யூட்டர் தொழில் நுட்ப விஞ்ஞானியான சிவாவுக்கு லண்டனில் வேலை கிடைக்கிறது. புதிதாக திருமணம் முடித்த மனைவியுடன் லண்டனுக்குச் சென்று சந்தோஷமாக ஊர் சுற்றிப் பார்க்கிறான். இந்த நேரத்தில் எதிர்பாராமல் ஒரு விபத்து நடக்க, நூலிழையில் உயிர் தப்புகிறான்.

அந்த விபத்துக்குப் பிறகு சிவாவின் பேச்சு, நடவடிக்கைகள் முற்றிலும் மாற்றமடைகின்றன. தன்னுடைய பெயரை மட்டும் சிவா என்று சரியாக சொல்பவன், புதிய மொழிகளைப் பேசுவதும் வித்தியாசமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமாக இருக்கிறான். பூப்போன்ற இதயத்துடன் இருந்த சிவா, புயல் போன்ற ஆக்ரோஷ இளைஞனாக மாறுகிறான். குறிப்பிட்ட சில ரவுடி கும்பலை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறான்.

இப்படி அப்பாவியாக இருந்தவன் அதிரடியாக மாறியது ஏன் என்பதுதான், இந்த ‘நான் யார்’ படத்தின் கதை. ஸ்பிலிட் பெர்சனாலிட்டி, ஆவி போன்ற சமாச்சாரங்கள் இல்லாமல் யாரும் எதிர்பார்த்திருக்க முடியாத திருப்பம் கதையில் இருக்கிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் லண்டன், பாரிஸ் நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளன. கார் மற்றும் ஹெலிகாப்டர் சேசிங் காட்சிகள் சிறப்பான முறையில் படமாக்கப்பட்டுள்ளன.  

இத்திரைப்படத்திற்கு சென்சாரில் ‘U’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படம் வரும் மே-6-ம் தேதி வெளியிடப்படுகிறது.

Our Score