full screen background image

‘நான் சிவப்பு மனிதன்’ பாணியில் உருவாகியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படம்

‘நான் சிவப்பு மனிதன்’ பாணியில் உருவாகியிருக்கும் ‘நான் கடவுள் இல்லை’ படம்

ஒரு காலத்தில் சட்டத்தின் நுணுக்கங்களை  கையில் எடுத்துக்கொண்டு பரபரப்பான படங்களை இயக்கியவர் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். ரஜினி, அம்பிகா, கே.பாக்யராஜ் நடிப்பில் ‘நான் சிவப்பு மனிதன்’ என்ற பரபரப்பான படத்தை இயக்கி பெயர் பெற்றார். அதே பாணியில் இப்போது ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். இது அவர் இயக்கியிருக்கும் 71-வது  படமாகும்.

இந்தப் படத்தை ஸ்டார் மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரே தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, பருத்தி வீரன்’ சரவணன், எஸ்.ஏ.சந்திரசேகர், இனியா, சாக்ஷி அகர்வால், அபி சரவணன், யுவன் மயில்சாமி, ரோகிணி, இமான் அண்ணாச்சி, மதுரை மாயக்கா, சிறுமி டயானாஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – மகேஷ் K.தேவ், இசை – சித்தார்த் விபின், படத் தொகுப்பு – பிரபாகர். கலை இயக்கம் – வனராஜ்.

இப்படத்தில் ஒரு தைரியமான போலீஸ் அதிகாரியாக சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அவரது கதாப்பாத்திரம் வழக்கமானதாக இல்லாமல்  புதுமையாக அதிரடியாக  இருக்கும். அவரது மனைவியாக இனியாவும், மகளாக டயானாஸ்ரீயும் நடித்திருக்கிறார்கள். அழுத்தமான வித்தியாசமான வில்லனாகப் பருத்தி வீரன்’ சரவணன் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீடு விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
Our Score