full screen background image

அர்ஜூன்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய திரில்லர் டைப் படம்

அர்ஜூன்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய திரில்லர் டைப் படம்

நடிகர்  அர்ஜூன் ஆக்‌ஷன், க்ரைம் படங்களுக்கு பெயர் பெற்றவர். அவர் நடித்த க்ரைம், ஆக்‌ஷன் படங்களின்  பிரமாண்ட வெற்றிகளை தொடர்ந்து, ‘ஆக்‌ஷன் கிங்’ என்ற பட்டத்தையும் பெற்றவர்.

அவரது தொடர் திரில்லர் படங்களின் வெற்றிகளை தொடர்ந்து, தற்போது புதிதாக ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தை GS ARTS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் G.அருள்குமார் தயாரிக்கிறார்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். மேலும் ராஜேஷ், பிரவீன் ராஜா, பிராங்க்ஸ்டர் ராகுல், அபிராமி வெங்கடாசலம் மற்றும் பல முக்கிய  பிரபலங்களும் இந்தப் படத்தில்  நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – சரவணன் அபிமன்யு, இசை – பரத் ஆசீவகன், படத் தொகுப்பு – லாரன்ஸ் கிஷோர், கலை இயக்கம் – அருண் சங்கர், சண்டை இயக்கம் – விக்கி, மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, எழுத்து, இயக்கம் – தினேஷ் லட்சுமணன்.

இந்தப் புதிய படம் குறித்து தயாரிப்பாளர் G.அருள் குமார் பேசும்போது, “இது ஒரு க்ரைம் -த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் கதை.  ஆக்‌ஷன் கிங்’ அர்ஜுன் இப்படத்தில் விசாரணை அதிகாரியாக நடிக்கிறார். இது மன இறுக்கம் கொண்ட  ஆட்டிஸ்டிக் குழந்தைகளின் பின்னணியில் ஒரு பெண் கதாப்பாத்திரத்தை  மையமாக கொண்ட  திரைப்படம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த முதன்மை பெண் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.  அவரது கதாபாத்திரத்திம் படத்தில் மிகவும் முக்கியத்துவம் மிகுந்த கதாப்பாத்திரமாகும்.

இயக்குநர் தினேஷ் லக்ஷ்மணன் திரைக்கதையை முதன்முதலில்  விவரித்தபோது, நான் பார்வையாளராக மிகவும் ரசித்தேன்.  திரையரங்குகளில் இப்படத்தை பார்க்கும்  பார்வையாளர்களுக்கு,  நீண்ட காலத்திற்குப் பிறகு  க்ரைம்-த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் வகைகளில் ஒரு புதிய அனுபவத்தை இப்படம் தரும்.

நடிகர் அர்ஜுன் இந்த  வகையைச் சேர்ந்த திரைப்படங்களில் அதிகம் நடித்திருந்தாலும், இப்படம் அதிலிருந்து மாறுபட்டு,  தனித்துவமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்…” என்றார்.

Our Score