full screen background image

ஜூலை 24-ம் தேதி வெளிவருகிறது ‘நாலு போலிசும் நல்ல இருந்த ஊரும்’

ஜூலை 24-ம் தேதி வெளிவருகிறது ‘நாலு போலிசும் நல்ல இருந்த ஊரும்’

JSK ஃபிலிம் கார்பரேஷன், லியோ விஷன்ஸ் மற்றும் 7C’s என்டர்டெய்ன்மெண்ட் Pvt. Ltd., ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள  திரைப்படம் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்.’ 

சென்ற மாதமே திரைக்கு வந்திருக்க வேண்டிய திரைப்படம் திடீரென்று ‘பாபநாசம்’ குறுக்கே வந்த்தால் கொஞ்சம் தள்ளிப் போடப்பட்டிருந்த்து. இப்போது இத்திரைப்படம் வரும் ஜூலை 24-ம் தேதி வெளிவரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில் அருள்நிதி ஜோடியாக ரம்யா நம்பீசன், சிங்கம்புலி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பக்ஸ், ராஜ் இவர்களுடன் யோகி பாபுவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து JSK ஃபிலிம் கார்பரேஷன் மற்றும் லியோ விஷன்ஸ் கூட்டாக தயாரிக்கும் திரைப்படம் எனபதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.  

“டிமான்டி காலனி’ திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அருள்நிதி நடிப்பில் வரும் ஜூலை 24-ம் தேதி வெளிவரவுள்ள  ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’ ஒரு முழு நீள காமெடி திரைப்படமாகும். ஆகவே நிச்சயம் இந்தப் படம் மக்களை மகிழ்வித்து வணிக ரீதியிலும் பெரிதும் வெற்றி பெரும்..” என நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் J.S.K. சதிஷ்.  

Our Score