full screen background image

ராஷ்மிகா மந்தனா, ரவீந்திர புள்ளே,  இணையும் பான் இந்தியா திரைப்படமான “மைசா” துவங்கியது!!

ராஷ்மிகா மந்தனா, ரவீந்திர புள்ளே,  இணையும் பான் இந்தியா திரைப்படமான “மைசா” துவங்கியது!!

Unformula Films தயாரிப்பில்,  “மைசா”  பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான பான்-இந்தியப் படமாக தயாராகி வருகிறது.

கோண்ட் பழங்குடியினரின் கலாச்சார பின்னணியில் வளமான மற்றும் வசீகரிக்கும் உலகில், ஆழமான கதையுடன் ஆக்சன் நிரம்பிய உணர்ச்சிபூர்வமான அதிரடி திரில்லராக “மைசா” உருவாகிறது.

நாயகி ராஷ்மிகா மந்தனா முற்றிலும் மாறுபட்ட,  இதுவரை தோன்றியிராத அவதாரத்தில், அழுத்தமான  மற்றும் உணர்ச்சி ஆழம் கொண்ட பெண்ணாக நடிக்கிறார்.

இப்படத்தில், சூர்யாவின் ரெட்ரோ படத்தில் பணியாற்றிய ஷ்ரேயாஸ் P. கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.  சண்டைக் காட்சிகளை கல்கி 2898 AD-யில் பணியாற்றி புகழ் பெற்ற ஆண்டி லாங் அமைக்கிறார். 

இயக்குநர், எழுத்தாளர்: ரவீந்திர புள்ளே, ஒளிப்பதிவு : ஷ்ரேயாஸ் P கிருஷ்ணா, சண்டைக் காட்சிகள்: ஆண்டி லாங், தயாரிப்பாளர்கள்: அஜய் & அனில் சாய்பு ரெட்டி, இணை தயாரிப்பாளர்: சாய் கோபா, தயாரிப்பு நிறுவனம்: Unformula Films, பத்திரிக்கை தொடர்பு: சதீஷ்குமார் S2 Media.

மேலும்  இசையமைப்பாளர் முதல் அடுத்தடுத்த கலைஞர்கள் குறித்து பெரிய ஆச்சரியங்களை அளிக்க தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  

இப்படத்தின் மற்ற  தொழில் நுட்ப வல்லுநர்களைப் பற்றி அறிய ரசிகர்கள் ஆவலோடு  காத்திருக்கிறார்கள்.

இந்தப் படம் இன்று பாரம்பரிய பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்டது, இதில் படத்தின் முக்கியக் குழுவினர் கலந்து கொண்டனர்.

சுரேஷ் பாபு கிளாப் போர்டு அடிக்க, ரவி கிரண் கோலா கேமராவை இயக்கினார். ஸ்கிரிப்டை தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்த ஹனு ராகவபுடி, முஹூர்த்த ஷாட்டுக்கு கௌரவ இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

படத்தின் வழக்கமான படப்பிடிப்பு நாளை ஹைதராபாத்தில் தொடங்குகிறது, முதல் கட்டமாக ராஷ்மிகா படக் குழுவுடன் படப்பிடிப்பில் இணைகிறார்.

ரவீந்திர புள்ளே  இயக்குநராக அறிமுகமாகும்  இந்தப் படம்,  சுவாரஸ்யமான டைட்டில் மற்றும் கவர்ச்சிகரமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Our Score