full screen background image

முத்து என்கிற காட்டான் – வெப் சீரீஸ் – விமர்சனம்

முத்து என்கிற காட்டான் – வெப் சீரீஸ் – விமர்சனம்

விஜய் சேதுபதி – முத்து (என்கிற  காட்டான்)

அபி நக்ஷத்ரா – சிட்டு

ரிஷா ஜேகப்ஸ் – மீனா

பார்வதி – லலிதா

சிந்து – கலைவாணி

மிலிந்த் சோமன் – சிவேட்டன்

முத்து குமார் – சிதார்த்தன்

சிங்கம்புலி – தங்கமுடி

வடிவேல் முருகன் – காலை பாண்டியன்

பாலாஜி சக்திவேல் – மீசை பெருசு

இர்ஷாத் அலி – பென்னி

சுதேவ் நாயர் – ஜானி

அரிஸ்டோ சுரேஷ் – பாபு

சுனிதா சந்திரன்

ஆர். அமரேந்திரன்

சாதனா

தொழில்நுட்ப குழு:-

இயக்குநர்: எம். மணிகண்டன்

இயக்குநர்: எடிட்டர்: – பி. அஜித் குமார்

ஒளிப்பதிவு: மது என், என். சண்முகசுந்தரம்

இசை: ராஜேஷ் முருகேசன்

ஓலி: அஜயன் அடாட்

கலை இயக்குநர்: ஜாக்கி, சாபு மோகன்

தயாரிப்பு: விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்

நிர்வாக தயாரிப்பாளர்: சந்துருசேகரன், வி.ஆர். குமார்

பாடல்வரிகள்: கபிலன் ஷக்கர்

ஆடை வடிவமைப்பாளர்: ஜே. கவிதா

சண்டை அமைப்: ல்வா மாஸ்டர்

ஸ்டைலிஸ்ட்: கவிதா

மேக்கப்: மொஹிதீன், ரோனெக்ஸ் சேவியர்

புரோஸ்தெடிக்ஸ்: பல்லவி ஷ்ராஃப், தினேஷ் சுப்பராயன்

ஸ்டில்ஸ்: அபிலாஷ் முல்லசேரி

பத்திரிக்கை தொடர்பு: யுவராஜ்

மதுரைக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமப்புற காவல் நிலையம், கடந்த மூன்று ஆண்டுகளாக எந்த வழக்கும் பதியப்படாததால் மூடப்படும் நிலையில் உள்ளது. அந்த நிலையத்தின் தலைமைக்காவலர் காளை பாண்டியன் (வடிவேல் முருகன்) மற்றும் உதவி ஆய்வாளர் சித்தார்த்தன் (முத்து குமார்) ஆகியோர் இந்தச் சூழலைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பொழுதைச் போக்கி வருகின்றனர். திடீரென ஒரு குன்றின் மீது துண்டிக்கப்பட்ட நிலையில் ஒரு ஆணின் தலை கண்டெடுக்கப்படுகிறது. அந்த இடத்தைச் சோதனையிடும்போது ஒரு பணக்கட்டும், ஒரு மர்மமான கடிதமும் கிடைக்கிறது. காளை பாண்டியன் தனது பணியைத் தக்கவைத்துக்கொள்ள, அந்தத் தலையைத் தனது எல்லைக்குள் கொண்டுவந்து விசாரணையைத் தொடங்குகிறார். விசாரணையில் அந்தத் தலைக்குச் சொந்தக்காரர் முத்து (என்கிற காட்டான்) என்பது தெரியவருகிறது. 1997-ல் ஒட்டன்சத்திரத்தில் ஒரு சாதாரண வாட்ச் கடையில் மெக்கானிக்காகத் தொடங்கும் முத்துவின் வாழ்க்கை, அடுத்த இருபது ஆண்டுகளில் கேரளா, மும்பை எனப் பல இடங்களுக்குப் பயணிக்கிறது. அவர் ஏன் காட்டான் என்று அழைக்கப்படுகிறார்? ஒரு சாதாரண மெக்கானிக் எப்படிப் பாதாள உலகத் தொடர்புகள் கொண்ட சிவத்தன் (மிலிந்த் சோமன்) என்பவருக்கு வலதுகரமாக மாறினார்? சிட்டு, மீனா மற்றும் சிந்து ஆகிய மூன்று பெண்களுடனான அவரது உறவு என்ன? இறுதியில் அவரைத் தலை துண்டித்துக் கொல்லும் அளவுக்குப் பகை வளர்த்தது யார்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை 1997 முதல் 2017 வரையிலான காலகட்டங்களை இணைத்து ஒரு ‘நான்-லீனியர்’ பாணியில் திரைக்கதை விவரிக்கிறது.

தேனி அருகில் இருக்கும் பெரியவீரம்பட்டியில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருக்கிறது. அங்கு சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருடன் மூன்று காவலர்கள் மட்டுமே பணியாற்றுகிறார்கள். எந்த ஒரு வழக்கும் அங்கே பெண்டிங்கில் இல்லை என்பதோடு புதிதாக எந்த ஒரு வழக்கும் அந்த ஸ்டேஷனுக்கு வராத காரணத்தினால் அந்த ஸ்டேஷனை இழுத்து மூடிவிட்டு அனைவரையும் வேறு ஸ்டேஷன்களுக்கு மாற்றிவிடலாம் என்று காவல்துறை உயர் அதிகாரிகள் சொல்லி இருக்கிறார்கள்.

தே ஊரில் பிறந்து வளர்ந்து இப்போது கான்ஸ்டபிள் ஆக இருக்கும் வடிவேல் முருகனுiக்கு இந்த ஊர் ஸ்டேஷனை மூடுவது பிடிக்காமல் இருக்கிறார். அதேபோல் சப் இன்ஸ்பெக்டராமுத்துக்குமாருக்கும் இது பிடிக்கவில்லை. வேறு ஸ்டேஷனுக்கு போனால் வேலை செய்ய வேண்டி வருமே.. வேலையே செய்யாமல் இப்படியே இங்கேயே இருக்கலாமே என்று எண்ணத்தில் இருக்கிறார்.

இடையில் ஏதாவது வழக்குகள் பதிவு ஆனால் ஸ்டேஷனை காலி செய்யும் முடிவு ரத்தாகும் என்பதால் ஏதாவது ஒரு கேஸ் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் கான்ஸ்டபிள்கள் அலைகிறார்கள்.

இந்த நேரத்தில்தான் அந்த ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் ஒரு இடத்தில் முத்து என்கிற விஜய் சேதுபதியின் தலை மட்டுமே கிடைக்கிறது. உண்மையில் அந்தத் தலை இந்தப் போலீஸ் ஸ்டேஷன் லிமிட்டுக்குள் இல்லாமல் அருகில் இருக்கும் ஸ்டேஷனின் லிமிட்டுக்குள்தான் இருக்கிறது.

ஆனால், இப்போது இந்த தலையை நம்முடைய ஸ்டேஷன் லிமிட்டுக்குள் கொண்டு வந்தால் நம்ம ஸ்டேஷனில் கேஸ் பதிவாகும். நாம் இதைக் கண்டிப்பாக விசாரிக்கத்தான் வேண்டும். இதனால், ஸ்டேஷனை காலி செய்ய மாட்டார்கள் என்ற குறுக்கு புத்தியில் அந்தத் தலையை பார்க்கும் கான்ஸ்டபிள் வடிவேல் முருகன் அந்தத் தலையை தங்களுடைய போலீஸ் லிமிட்டுக்குள் இருக்கும் ஒரு இடத்திற்குக் கொண்டு வந்து வைத்து விடுகிறார்.

இப்பொழுது வேறு வழியில்லாமல் இந்த வழக்கு அந்த ஸ்டேஷனில் பதிவாக…. கான்ஸ்டபிள் காளை பாண்டியன் என்ற வடிவேல் முருகனும், சப் இன்ஸ்பெக்டர் சித்தார்த்தன் என்ற முத்துக்குமாரும் இன்னொரு கான்ஸ்டபிள் ஆன சிங்கம் புலியும் இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

விஜய் சேதுபதியின் புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு அக்கம் பக்கம் ஊர்களில் இவனை பார்த்து இருக்கிறீர்களா?” என்று விசாரிக்க துவங்குகிறார்கள். விசாரணையின் போக்கு விஜய் சேதுபதியை நல்லவராகவும், இன்னொரு பக்கம் வல்லவராகவும் காட்டுகிறது

ஒவ்வொரு எபிசோடிலும் விஜய் சேதுபதிக்கு ஒரு புதிய கதை உருவாகி அதன் திரைக்கதைகளும் விரிந்து கொண்டே செல்கின்றன.

முதல் கட்ட விசாரணையில் விஜய் சேதுபதியின் உண்மையான பெயர் முத்து என்பது தெரிய வருகிறது. அதற்கு பின்பு 1997-ல் ஒட்டன்சத்திரத்தில் ஒரு வாட்ச் ரிப்பேர் கடையில் மெக்கானிக்காக வேலை பார்த்தது தெரிகிறது. அதற்கு பின்பு 2005-ல் யானை பாகனாக கேரளாவில் பணியாற்றியிருக்கிறார். 2006-ல் கேரளாவில் ஆலுவாவில் இருக்கும் ஒரு அனாதைகள் இல்லத்தில் மேனேஜராகவும் வேலை பார்த்திருக்கிறார். 2012-ல் தமிழ்நாட்டின் கிராமப் பகுதிகளில் ஊர், ஊராக வந்து ஆட்டுப் புழுக்கையை விலைக்கு வாங்கும் ஒரு வித்தியாசமான வியாபாரியாக இருந்திருக்கிறார். 2013-ல் மதுரையில் இருக்கும் கண்மணி நடன குழுவில் ஒரு உறுப்பினராகவும் அந்த குழுவில் இருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு பாடி கார்டாகவும் வேலை செய்து இருக்கிறார்.

இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரிப்பதற்காக கேரளாவிலேயே தங்கி இருந்தும் சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரும், சிங்கம் புலியும் முத்துவைப் பற்றிய தகவல்களை திரட்டுகிறார்கள். இன்னொரு பக்கம் மதுரை பகுதிகளில் வடிவேல் முருகன் கண்மணி நடன குழுவில் இருக்கும் அந்த இரண்டு பெண்களையும் தேடித் தேடி சென்று பார்த்து தகவல்களை சேகரிக்கிறார். ஆனாலும் முத்து எப்படி இறந்தார்? யார் அவரை கொலை செய்தது..? அவருடைய உடல் எங்கே? என்பது பற்றிய ஒரு சிறிய துப்புக்கூட கிடைக்காமல் அல்லாடுகிறார்கள் போலீசார்.

இறுதியில் என்ன நடந்தது?.. முத்துவின் உடல் கிடைத்ததா?.. முத்துவை யார் கொலை செய்தது? எதற்காக கொலை செய்தார்கள்? என்கின்ற நம்முடைய கேள்விக்கு கிட்டத்தட்ட 10 எபிசோடுகளை இழுத்துச் சென்று கடைசியாக அரைகுறையாக சொல்லி முடித்து இருக்கிறார்கள்.

காக்கா முட்டை’, ஆண்டவன் கட்டளை’, கடைசி விவசாயி என்ற மூன்று முத்தான திரைப்படங்களை கொடுத்திருக்கும் இயக்குர் மணிகண்டன் இந்தப் படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.

எப்பொழுதும் சஸ்பென்ஸ் திரில்லர் கதைகளில் ஏதோ ஒரு விஷயத்தை மட்டுமே சஸ்பென்சாக வைத்து கடைசிவரையிலும் கொண்டு போவார்கள். அப்படித்தான் முதலில் எபிசோடிலேயே விஜய் சேதுபதி கொலையுண்ட செய்தியை காட்டிவிட்டு அதற்கு பிறகு அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? யார் அவரை கொலை செய்தது? என்ற இரண்டு கேள்விகளுக்கான விடையாக இந்த வெப் சீரீஸை அநியாயத்துக்கு இழுத்திருக்கிறார் மணிகண்டன்.

கடைசி விவசாயி திரைப்படம் மிகப் பெரிய நஷ்டத்தை கொடுத்ததால் அதன் நஷ்டத்தில் தானும் பங்கெடுத்துக் கொள்வதாக நினைத்து விஜய் சேதுபதி, இந்த படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவராக மாறி மணிகண்டனுக்கு கை கொடுத்து உதவி இருக்கிறார். விஜய் சேதுபதியின் இந்த உதவி செய்யும் மனதிற்கு நம்முடைய பாராட்டுக்கள்.

முத்துவாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு கதையில் வந்து தன்னை அடையாளப்படுத்தி இருக்கிறார்.

முதலில் ஆட்டுப் புழுக்கையை மொத்தமாக வாங்கிக் கொண்டு வந்து அந்தக் கிராமத்து மக்களுக்கு ஒரு வழியில் ஏதோ ஒரு உதவி செய்துவிட்டு ஆட்டுப் புழுக்கை ஊருக்கு வெளியே கொண்டு போய் அவர் வீசுகின்ற அந்தக் காட்சியில் இயக்குர் சொல்லி இருக்கும் பொது அறிவும், நல்லதொரு திட்டமும் பாராட்ட வைக்கிறது.

வயதானவர் என்றுகூட பார்க்காமல் தன் ஹோட்டலில் வேலை பார்க்கும் முதியவரை விரட்டி விரட்டி வேலை வாங்கிக் கொண்டிருக்கும் ஒரு கடை முதலாளியிடம் மொத்த பணத்தையும் கொடுத்து அவரை அனுப்பிவிட்டு அந்த முதியவரையே கல்லாவில் உட்கார வைத்து நீங்கள்தான் இனிமேல் இங்கு முதலாளி என்று சொல்லிவிட்டு கிளம்பும்பொழுது நிஜமாகவே கை தட்ட வைத்துவிட்டார் விஜய் சேதுபதி.

வாட்ச் மெக்கானிக் கதையில் மிலிந்த் சோமன் மந்து வைத்துவிட்டு போன பணப் பையை அப்படியே அவரிடம் திருப்பிக் கொடுத்து இது உங்க பணம்.. என்னுடைய பணம் அல்ல என்று சொல்லும்போது  அந்த எபிசோடுக்கு நல்லதொரு கதையாக அது அமைந்துவிட்டது.

இதுபோக அனாதைகள் இல்ல மேலாளர் மற்றும் கண்மணி நடனக் குழுவில் பாடிகாடாக வேலை செய்யும் பொழுதும் அந்த கதைகளின் வழியாகவும் விஜய் சேதுபதி என்ற முத்துவின் கதாப்பாத்திரம் கனகச்சிதமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

எல்லோருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம். நல்லவையே நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு. அவருடைய மனதில் இருக்கும் மிகப் பெரிய நன்றி கடனை வெளிப்படுத்த வேண்டும் என்ற குணம்.. இவை எல்லாம் சேர்ந்து விஜய் சேதுபதி என்ற அந்த முத்துவை நமக்கு ஒரு நல்லவராகவே காட்டியிருக்கிறது.

இவருடைய தலையை காட்டும் பொழுதுகூட புன்சிரிப்போடு இருக்கும் விஜய் சேதுபதி பார்க்கும்பொழுது இயக்குநர் மணிகண்டனின் டச் தெளிவாகத் தெரிகிறது.

பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கும் முத்துக்குமார் இந்தப் படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்திருக்கிறார். அப்படித்தான் சொல்ல வேண்டும். அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் கொஞ்சம் வித்தியாசமாகவும் ரசிக்கக் கூடியதாகவும் இருக்கிறது. அதிகப்படியான ஆங்கில வார்த்தைகளை பேசும் அவருடைய ஸ்டைலும், பேச்சும் இறுதிவரையிலும் வந்து நம்மை பெரிதும் கவர்கிறது.

கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் சிங்கம் புலி அவ்வப்பொழுது தன்னுடைய வீட்டுகளை வீசி கொஞ்சம் கொஞ்சம் சிரிக்க வைக்கிறார்.தே ஊரில் குடியிருக்கும் வடிவேல் முருகன் தன்னுடைய அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையிலான சண்டையில் தலையை கொடுத்து அல்லல்படும் கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார்.

ஆனாலும், அவருடைய அம்மா, மனைவி சண்டை அவருடைய குடும்பத்தினர் கதையையெல்லாம் இதில் வைத்தார்கள் என்று தெரியவில்லை.ந்தக் காட்சிகளை சுத்தமாக நீக்கி இருக்கலாம். தேவையில்லாத இடைச்செருகலாக இந்தக் குடும்பக் கதை கடைசிவரையிலும் வலம் வந்திருக்கிறது.

விஜய் சேதுபதி அனாதை இல்லத்தில் மேனேஜராக இருக்கும் பொழுது அங்கு வேலைக்கு வரும் ஹீரோயின் சாதனாவும் அழகாக நடித்திருக்கிறார். அவரை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வந்திருக்கும் நேரத்தில் நான் இவரைத்தான் காதலிக்கிறேன்.. இவரைத்தான் திருமணம் செய்யப் போகிறேன் என்று சொல்வது கொஞ்சம் அதிகப்படியான திரைக்கதையாகிவிட்டது.

கண்மணி நடன குழுவில் இருக்கும் ரிஷா விஜய் சேதுபதியை கொஞ்சம், கொஞ்சமாக காதலிக்க ஆரம்பிப்பதும் வேறு வழியில்லாமல் விஜய் சேதுபதியும் அந்தக் காதலை ஏற்றுக் கொள்வதுமான கதையை மிக அழகாக திரைக்கதையில் படமாக்கி இருக்கிறார்கள். உடன் இருக்கும் அபி நட்சத்திராவும் மிக அழகான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மீசை என்ற அடைமொழியில் அழைக்கப்படும் பாலாஜி சக்திவேல் அட்டகாசமான ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். அவருடைய அறிமுக கட்சியிலும், அடுத்து வரக்கூடிய காட்சிகளிலும் அவருடைய பேச்சும், உடல் மொழியும் அழகு! நிறையவே சிரிக்க வைத்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். நிறைய கெட்ட வார்த்தைகளையும் சரளமாக பயன்படுத்தி இருக்கிறார். இதைக் கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.

மூணாவது பாட்டு முடிஞ்ச உடனே புள்ளைய கூட்டிட்டு வரல அப்புறம் டக்கிறதே வேற என்று பாலாஜி சக்திவேல் விஜய் சேதுபதி எச்சரித்து விட்டு போகும்போது நமக்கு அது காமெடியாக தோன்றுகிறது. ஒரு நடிகராக பாலாஜி சக்திவேல் ஒவ்வொரு படத்திலும் தன்னுடைய புதிய புதிய நடிப்புகளை காட்டி அசத்தி வருகிறார். அவருக்கும் நமது பாராட்டுக்கள்.

காளை பாண்டியனாக நடித்திருக்கும் வடிவேல் முருகனும் தன்னுடைய சிறப்பான நடிப்பையே கொடுத்திருக்கிறார். இந்த தொடர் அவருக்கு நிச்சயம் பெயர் சொல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

கடைசியாக வடிவேல் முருகன் தன்னுடைய மாமனார் வீட்டில் இருக்கும் மனைவி அழைப்பதற்காக சென்றவர் பார்வதியின் காலில் விழுந்து வீட்டுக்கு வா என்று கெஞ்சுகின்றபோது நிச்சயமாக நாம் எதிர்பார்க்காத ஒரு காட்சியாக அமைந்துள்ளது.

வடிவேல் முருகனின் மனைவியாக நடித்திருக்கும் விஜே பார்வதி ப்படி ஒரு நடிப்பை வேறு எதிலும் நிச்சயம் காட்டி இருக்கமாட்டார். ஒரு வன்மமான மருமகளாக அவர் நடித்திருக்கும் பல காட்சிகளும் நம்முடைய கவனத்தை திசை திருப்பவே வந்திருக்கிறது என்று உணர முடிகிறது.

கான்ஸ்டபிள் சிங்கம் புலி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாருக்கு உதவியாக வந்து அவ்வப்பொழுது குண்டக்க மண்டக்க பேசி, காமெடியாகவும் பேசியும் இந்தத் தொடரை நாம் தொடர்ந்து பார்ப்பதற்கு ஒரு தூண்டுதலாகவும் அமைந்துள்ளார்.

கேரளாவின் எம்.எல்..வாக நடித்தவர், அனாதை இல்லத்தை நடத்தி வருபவர் மற்றும் ஊர்க்காரர்கள் பல நடிகர், நடிகைகளும் இந்தப் படத்தில் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் பாபு என்ற மலையாள நடிகர் நடித்திருக்கும் அந்த கிளைமாக்ஸ் காட்சிகள் நிச்சயமாக பாராட்ட கூடியது. அவ்வளவு அழகான நடிப்பினை கொடுத்திருக்கிறார். இன்னொரு பக்கம் ஜானியாக நடித்த நடிகரும் தன்னுடைய அசத்தலான வில்லத்தனத்தை காட்டியிருக்கிறார்.

மிலிந்த் சோமன் வில்லனா அல்லது குணச்சித்திர நடிகரா என்கிற வித்தியாசமே தெரியாத அளவுக்கு நடித்திருக்கிறார். அதிலும் கடைசியாக இறப்பதற்கு இரண்டு நிமிடங்கள் முன்பாக அமைதியாக தன்னுடைய சொத்துக்களை விஜய் சேதுபதிக்கு எழுதி வைப்பதும், விஜய் சேதுபதியிடம் உன்ன மாதிரி ஒரு நல்லவன் யாரும் இல்லை என்று அவர் சொல்வதெல்லாம் ஒரு அழகான திரைக்கதைதான்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் அத்தனை பேரின் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளும் மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்த கேரக்டர் ஸ்கெட்ச்சுகளை மீறி அவர்கள் நடிக்கவில்லை என்பதுதான் இந்த வெப் சீரிஸின் ஒரே பலம்.

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் 10 எபிசோடுகள் கொண்ட ஒரு கதைக்கு அதுவும் கதைக்கு போர் அடிக்கவே கூடாது என்கின்ற ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மனதில் வைத்து பின்னணி இசையை அட்டகாசமாக அமைத்திருக்கிறார். பல காட்சிகளில் பின்னணி இசை இல்லாததே நமக்கு தெரியவில்லை. இருக்கின்ற காட்சிகளிலும் அது நமக்கு எந்த ஒரு உறுத்தலையும் தரவில்லை மிக அழகாக இசைக்கப்பட்டு இருக்கிறது.

மது, சண்முகசுந்தரம் என்ற இரண்டு ஒளிப்பதிவாளர்கள் இந்தப் படத்தை அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். இரண்டு பேர் ஒளிப்பதிவு செய்திருந்தாலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லாமல் முதலில் இருந்து கடைசிவரையில் படத்தை ஒரே மாதிரியான ஒளியில் பதிவு செய்திருக்கிறார்கள்.

படத்தின் திரைக்கதை பல்வேறு இடங்களில் நடைபெறுவதால் அந்த இடங்களுக்கு ஏற்ப பொருட்களையும் இடங்களையும் தயார் செய்து அழகுப்படுத்தி இருக்கிறார்கள் கலை இயக்குநர்களான ஜாக்கியும், சாபு மோகனும்!

படத்திற்கு படத் தொகுப்பும் செய்து சில காட்சிகளை இயக்கவும் செய்திருக்கிறார் படத் தொகுப்பாளர் அஜித் குமார்.

இந்தப் படத்தின் திரைக்கதையே நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடப்பதோடு அவ்வப்போது கதையில் அறிமுகமாகும் ஒவ்வொரு நடிகர், நடிகைகளும் தங்களை வெளிப்படுத்திக் கொண்டே செல்ல கதையும் நான் லீனியர் முறையில் விரிந்து கொண்டே போகிறது.

இதில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிய தவறு நடந்திருந்தால்கூட நமக்குப் புரியாமல் போயிருக்கும். ஆனால் அப்படி ஒரு நிலைமையை உருவாக்காமல் மிக அழகாக கவனமாக நுணுக்கமான முறையில் இந்தப் படத்திற்கு படத் தொகுப்பு செய்திருக்கிறார் அஜித்குமார். அவருக்கு நமது பாராட்டுக்கள்.

புது புது கதைகள் வரும்பொழுதும் விஜய் சேதுபதி பற்றிய எதிர்பார்ப்பை நமக்கு கூட்டிக் கொண்டே போயிருக்கிறது தொகுப்பாளரின் அழகான தொகுப்பு. இயக்குரின் பாதி வேலையை இவரே சரி செய்து விட்டார் என்பது உண்மை.

ஆனால் இந்த வெப் சீரீஸின் மிகப் பெரிய குறை சண்டை இயக்கம்தான். மிக சாதாரணமாக சண்டை காட்சிகள் பதிவாகியிருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. ரோப் கயிறில் கட்டித் தூக்கி இறக்குவதுகூட தெளிவாக பதிவாகியிருப்பது யார் செய்த தவறு..?

ஒரு எளிய மனிதனாக அறிமுகமாகும் விஜய் சேதுபதி அவருடைய வாழ்க்கை கதையில் தான் சந்தித்த எளிய மனிதர்களின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டி இருக்கிறார். சக மனிதர்களிடத்தில் பாசத்தையும், அன்பையும் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லிவிட வேண்டும் என்பது போல இவர் உதவி செய்கின்ற அத்தனை இடங்களிலும் மனிதம் பரப்புரை செய்திருக்கிறது.

இப்படிப்பட்ட நல்ல குணம் உள்ள ஹீரோ ஏன் இறந்தான் என்பதற்கான விடையைத்தான் கடைசியில் சொல்லியிருக்கிறார் இயக்குர் மணிகண்டன். ஆனால், அதை இன்னமும் கொஞ்சம் தெளிவாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஒருவேளை இந்த சீரியஸின் இரண்டாவது பகுதி வந்தாலும் வரலாம். நாம் எதிர்பார்க்கலாம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு கேள்விக்குறியோடு இந்த வெப்சீரீஸை முடித்து இருக்கிறார்கள்.

ஒவ்வொரு எபிசோடிலும் ஒவ்வொரு கதையை சொல்லி ஒரு எதிர்பார்ப்பை தூண்டிவிட்டுக் கொண்டே சென்றாலும் தேவையில்லாத ஆணி என்பது போல சி சில கதாபாத்திரங்கள் இடையிடையே வந்து பேசிக் கொண்டே நேரத்தை கடத்தி இருப்பது நமக்கு கொஞ்சம் ரிச்சலாகத்தான் இருக்கிறது. அதையெல்லாம் நீக்கி இருக்கலாம்.

மொத்தத்தில் இந்த முத்து என்ற காட்டான் நிச்சயமாக வெப் சீரியஸ் ரசிகர்களையும் தாண்டி சினிமா ரசிகர்களையும் கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.

RATING : 4 / 5

 

Our Score