இந்தப் பொது முடக்கக் காலத்தில் திரைப்படப் படப்பிடிப்புகள் முடங்கியுள்ள நிலையில் திரையுலகத் திறமையாளர்கள் முடங்கிப் போகாமல் இருக்க மியூஸிக் ஆல்பங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்கள். அதற்கு இசை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
அதற்கு ‘என்ஜாயி எஞ்சாமி’, ‘குக்கூ குக்கூ’ போன்ற பாடல்களை உதாரணமாகச் சொல்லலாம். இந்த வரிசையில் சேர்வதற்கு இன்று பலரும் தயாராகி வருகிறார்கள்
அவ்வகையில் ‘முதலும் முடிவும்’ என்கிற பெயரில் காதல் மொழி பேசும் இனிமை சொட்டும் இசை ஆல்பம் ஒன்று உருவாகியுள்ளது.
இதற்கும் இசையமைத்து உள்ளவர் ஹரி எஸ்.ஆர். இசையின் மீது தீராத காதல் கொண்டுள்ள இவர், ஏராளமான இசைக் கருவிகளை வாசிக்கத் தெரிந்தவர்.
தமன், ஷபீர், கணேஷ் சந்திரசேகரன் போன்ற இசையமைப்பாளர்களிடம் திரைப்படங்களில் பணியாற்றியவர். நிறைய மேடைகளில் இசைக் குழுவில் இடம் பெற்றுத் தன் திறமையை வெளிப்படுத்தியவர். சங்கரா டிவி, SVBC டிவி போன்ற தொலைக்காட்சிகளில் தோன்றி இசை நிகழ்ச்சிகள் வழங்கியவர்.
தன்னுடைய இசைக் கனவினை மனதில் சுமந்து கொண்டு இருந்தவர், படிப்பை முடித்த பின் இப்போது முழு நேர இசையமைப்பாளராக களத்தில் இறங்கி விட்டார்.
இதுவரையிலும் ஐம்பது விளம்பரப் படங்களுக்கும் இருநூறு குறும் படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
வீடியோ ஆல்பம் மூலம்தான் ரசிகர்களைச் சென்றடைய முடியும் என்று முடிவு செய்து தன்னுடைய திறமையை வெளிப்படுத்தும்விதமாக ‘முதலும் முடிவும்’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார்.
இந்த ஆல்பத்தில் ‘முதலும் நீதான் முடிவும் நீதான்’ என்று தொடங்கும் பாடலை உருவாக்கி இருக்கிறார்.
இந்தப் பாடலை ரேஷ்மன் குமார் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு இயக்குநர் –மணிவண்ணன், படத் தொகுப்பு – ஹரிகரன்.ஐ, விளம்பர வடிவமைப்பு மற்றும் அனிமேஷன் வேலைகளை குஞ்சன் தோஷி செய்திருக்கிறார். வி.கே.ரெக்கார்ட்ஸ் சார்பில் காயத்ரி ஆர்.எஸ். தயாரித்துள்ளார்.
இந்தப் பாடலை ஏர்டெல் சூப்பர் சிங்கர் வெற்றியாளர் ஆனந்த் அரவிந்த் தக்ஷன் பாடியுள்ளார். இவருடன் ஆர்த்தி எம்.என். அஸ்வினும் பாடியுள்ளார்.
இந்த ‘முதலும் முடிவும்’ ஆல்பம் ஏப்ரல் 29-ம் தேதி மாலை 5 மணிக்கு யூ டியூபில் வெளியிடப்பட்டது. இது மிக முக்கிய சமூக ஊடக இணைய மேடைகளிலும் வெளியாகும்.
நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகர் பிரேம்ஜி, நடிகர் மாஸ்டர் மகேந்திரன், இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன், மியூசிக் டைரக்டர் சபீர்… இவர்கள் அனைவரும் இசையமைப்பாளர் ஹரி எஸ்.ஆர்.ஐ பாராட்டி இந்த இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளனர்.
இசையமைப்பாளர் ஹரி இப்போது ‘பிள்ளையார் சுழி’, ‘சோழ நாட்டான்’ என இரண்டு திரைப்படங்களில் பணியாற்றும் வாய்ப்பையும் பெற்றிருக்கும் இவர், இந்தப் வீடியோ பாடல் தனக்குப் பெரிய வெளிச்சத்தைத் தேடிக் கொடுக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறார்.