full screen background image

இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு IPhone வழங்கிய இயக்குநர்..!

இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கு IPhone வழங்கிய இயக்குநர்..!

24 HRS புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ஒன் 2 ஒன்’.

இந்தப் படத்தில் சுந்தர்.C நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். மேலும் விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்த்ரா இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி ஆகியோரும் நடித்துள்ளனர்.

திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தை தொடர்ந்து இயக்குநர் K.திருஞானம் இயக்கியிருக்கும் இரண்டாவது படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

இப்படத்தில் நான்கு பாடல்களுக்கு இசையமைப்பாளர் சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். மேலும் அசத்தலான ஒரு தீம் இசையையும் உருவாக்கியுள்ளார். இசையமைப்பாளர் சித்தார்த் விபினின் இசையால் ஈர்க்கப்பட்ட படத்தின் இயக்குநரான K.திருஞானம் அவருக்கு ஒரு புதிய IPhone பரிசளித்துள்ளார்.

விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்..

Our Score