full screen background image

இசையமைப்பாளர் சங்கத் தலைவராக எஸ்.ஏ.ராஜ்குமார் தேர்வு..!

இசையமைப்பாளர் சங்கத் தலைவராக எஸ்.ஏ.ராஜ்குமார் தேர்வு..!

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவராக எஸ்.ஏ.ராஜ்குமார் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.   

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் 2016 –  2018-ம் ஆண்டிற்கான தேர்தல் திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தில் நேற்று நடைபெற்றது.   

இத்தேர்தலில் தற்போதைய தலைவரான இசையமைப்பாளர் எஸ்.எ.ராஜ்குமார் மீண்டும் தலைவராக வெற்றி பெற்றுள்ளார். பொதுச் செயலாராக டோம்னிக் சேவியர் வெற்றி பெற்றிருக்கிறார். பொருளாளராக பி.ஜி.வெங்கடேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

துணை தலைவர் பதவிக்கு இசையமைப்பாளர் தினா, ஜெயசந்திரன், டி.கே.மூர்த்தி, பி.செல்வராஜ், திரிநாத் ராவ் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளார்.

இணை செயலாளர்களாக பி.வி.ரமணா, எல்.வி.சுதாகர், ரங்கராஜன், செல்வராஜ், பெர்னாட் ஆகியோர் வெற்றிபெற்றுள்ளனர்.

இந்த சங்கத்தில் மொத்தம் 525 பேர் உறுபினர்களாக உள்ளனர்.                    

Our Score