full screen background image

பிரபுதேவாவின் ‘முசாசி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

பிரபுதேவாவின் ‘முசாசி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது

‘ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட்’ என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜான் பிரிட்டோ பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் புதிய படம் ‘முசாசி.’.

ஆக்சன் எண்டர்டெய்னர் ஜானரில் தயாராகும் இந்தப் படத்தில் ‘நடனப் புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்கிறார். சவாலான ஒரு போலீஸ் அதிகாரி வேடமேற்றிருக்கும் பிரபு தேவாவிற்கு இந்தப் படத்தில் ஜோடியில்லை.

இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், நடிகர் ‘மாஸ்டர்’ மகேந்திரன், ‘பழைய ஜோக்’ தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.

விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ்.என்.பிரசாத் இசையமைக்கிறார். அறிமுக இயக்குநரான ஷாம் ரோட்ரிக்ஸ் இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று, அவருடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டார்.

வெளியாகியிருக்கும் ஃபர்ஸ்ட் லுக்கில் பிரபு தேவாவின் தோற்றம், கம்பீரமாக இருப்பதால் இணையவாசிகளின் ஆதரவும், வரவேற்பும் எதிர்பார்ப்பைவிட கூடுதலாக கிடைத்து வருகிறது.

Our Score