full screen background image

கார்த்தியின் ‘கைதி’ படம் ரஷ்ய மொழியில் ரஷ்யாவில் வெளியாகிறது..!

கார்த்தியின் ‘கைதி’ படம் ரஷ்ய மொழியில் ரஷ்யாவில் வெளியாகிறது..!

நடிகர் கார்த்தியின் நடிப்பில் கடந்த 2019-ம் வருஷம் வெளியான படம் ’கைதி’. நரேன், அர்ஜுன் தாஸ், மாளவிகா அவினாஷ், ஜார்ஜ் மரியான் உட்பட பலர் நடித்திருந்த  இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கம் செய்திருந்தார்.

ட்ரீம் வாரியார் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து விஜய்யின் ’மாஸ்டர்’ படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். இப்போது கமல்ஹாசன் நடிக்கும் ’விக்ரம்’ படத்தை இவர்தான் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில் ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகமும் உருவாக இருப்பதாக தகவல் வெளியான நிலையில் ’கைதி’ படம் ரஷ்யாவில் ரஷிய மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகப் போகும் செய்திகள் வந்திருக்கின்றன.

ஏற்கெனவே இதே கைதி’ திரைப்படம் ‘கைதி டில்லி’ என்ற பெயரில் ஜப்பானில் வெளியானது.

இப்போது இதன் ரஷ்ய டப்பிங் திரைப்படம் வரும் மார்ச் 10-ம் தேதி ரஷ்ய நாட்டில் வெளியாகவுள்ளது.

இதையொட்டி ரஷ்ய மொழியில் இந்தக் கைதி’ படத்தின் டிரெயிலரை அந்தத் தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது.

Our Score