full screen background image

நான்கு பேரின் முரண்பட்ட வாழ்க்கையைச் சொல்லும் ‘முரண்’  

நான்கு பேரின் முரண்பட்ட வாழ்க்கையைச் சொல்லும் ‘முரண்’  

தரமான குறும் படங்களின் மூலம் திறமையான கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’  நிறுவனம் தற்போது  ‘முரண்’ குறும்படம் மூலம் மேலும் ஒரு இயக்குநரை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அவர்தான் இயக்குநர் ஆதித்யா நாராயணன்.

mu 3

இந்தக் குறும்படத்தில் ஜி.எஸ்.விஜயலட்சுமி, அனுஷா பிரவீன், வித்யா அனந்தராமகிருஷ்ணன், பிரவீன் நேப்பாளி, ஜனனி விஸ்வநாதன், பேபி அனிகா, வைஷ்ணவி தர், சதீஷ் சட்டநாதன், ரம்யா விஜயன், ரகுராமன் ராமமூர்த்தி, ரேவதி சீத்தாராமா, சரண்யா மாதவன், ஷ்ரேயாஸ் சீனிவாசன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ரவிசங்கர், இசை – கெளசிக் சீனிவாசன், படத் தொகுப்பு – குமார் குணசேகரன், எழுத்து, இயக்கம் – ஆதித்யா நாராயணன்.

5

குறும் படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஆதித்யா நாராயணன், “பெரும்பாலான மக்கள் தங்களின்  வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் முடிவுகளை, இரண்டு முக்கியமான  தருணங்களை மனதில் கொண்டுதான் எடுக்கிறார்கள். ஒன்று, தன்னை மட்டுமே  பற்றிய சிந்தனையில் எடுக்கப்படும் முடிவு. மற்றொன்று தன்னை சார்ந்து இருக்கும் மக்களை மனதில் கொண்டு எடுக்கப்படும் முடிவு. இதுதான் இந்த ‘முரண்’ குறும் படத்தின் ஒரு வரி கதை.

mu 4

காதல் தோல்வியை எண்ணி வருந்தி கொண்டிருக்கும் ஒரு பெண், தாங்கள் படும் கஷ்டத்தை வெளிநாட்டில் இருக்கும் தங்களின் மகனுக்கு தெரியப்படுத்தக் கூடாது என்று கருதும் பெற்றோர், காதல் தோல்வியை பெரிதாக எடுத்து கொள்ளாமல் தன்னுடைய வாழ்க்கையை நோக்கி பயணம் செய்யும் ஒரு பெண்,  தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் சரி தன்னுடைய தாய் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணும் மகள். இவர்கள் நான்கு பேரின் வாழ்க்கையிலும் எடுக்கப்படும் வேறுபட்ட முடிவுகள்தான் இந்த ‘முரண்’ குறும் படம்..” என்றார். 

Our Score