தெருக்கோடியில் பிறந்து நாகரீக வாழ்க்கைக்கு ஏங்கும் ஒருவனின் கதைதான் ‘முன்னா’ திரைப்படம்..!

தெருக்கோடியில் பிறந்து நாகரீக வாழ்க்கைக்கு ஏங்கும் ஒருவனின் கதைதான் ‘முன்னா’ திரைப்படம்..!

ஸ்ரீதில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ராமு முத்துச்செல்வன் தயாரித்துள்ள திரைப்படம் ‘முன்னா’.

படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான சங்கை முருகேசனே இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மேலும் நியா கிருஷ்ணா, ரம்யா, ராஜு, சிந்து, ராஜாமணி, சண்முகம், வெங்கட்  ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாடல்கள் இசை – D.A.வசந்த், பின்னணி இசை – சுனில் லாசர், ஒளிப்பதிவு – ரவி, நடன இயக்கம் – கென்னடி மாஸ்டர், படத் தொகுப்பு – பத்மராஜ், தயாரிப்பு, எழுத்து, இயக்கம் – சங்கை முருகேசன்.

சாட்டையடித்து கலைக் கூத்து நடத்தி பிழைப்பு நடத்தும் நாடோடிக் கூட்டத்தில் பிறந்த ஒருவனுக்கு நாகரீக வாழ்க்கையை அனுபவிக்க ஆசை பிறக்கிறது. அதிஷ்டவசமாக அந்த வாழ்க்கை அவனுக்கு அமைந்துவிட, அந்த வாழ்க்கையில் அவன் மகிழ்ச்சியாக இருந்தானா…?

நாடோடி வாழ்கையில் கிடைத்த மகிழ்ச்சியும், மன நிம்மதியும் நாகரீக வாழ்க்கையில் அவனுக்கு கிடைத்ததா என்ற கேள்விகளுக்கான விடைதான் முன்னா திரைப்படம்.

தெருக்கோடி வாழ்க்கையில் கிடைக்கிற பணமே போதும் என்று மனசு சொல்லும். தே மனசு நாகரீக வாழ்கையில் எவ்வளவு பணம் கிடைத்தாலும் பத்தாது என்றுதான் சொல்லும், ஆனால், நிம்மதியும் இருக்காது என்ற கருத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இந்த ‘முன்னா’ திரைப்படம்.

“நல்ல கருத்துள்ள படங்களுக்கு மக்கள் எப்போதும் ஆதரவு அளிப்பார்கள். அதே போல் இந்த முன்னா படமும் மக்களின் ஆதரவோடு வெற்றி பெறும்…” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இயக்குநர் சங்கை குமரேசன்.

படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. 

Our Score