ஆணவக் கொலைகள் பற்றிப் பேச வரும் ‘முந்திரிக் காடு’ திரைப்படம்

ஆணவக் கொலைகள் பற்றிப் பேச வரும் ‘முந்திரிக் காடு’ திரைப்படம்

தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக் காடு.’

நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான C.மகேந்திரனின் மகன்.   கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இயக்குநர் சீமான் போலீஸ் அதிகாரியாக   கதையின்  முக்கிய  கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு - G.A. சிவசுந்தர், இசை - A.K. பிரியன், பாடல்கள் – கவி பாஸ்கர், படத் தொகுப்பு  - எல்.வி.கே.தாஸ், கலை இயக்கம் - மயில் கிருஷ்ணன், சண்டை இயக்கம் - லீ.முருகன், தயாரிப்பு மேற்பார்வை  - டி.ஜி.ராமகிருஷ்ணன், எழுத்து, இயக்கம் – மு.களஞ்சியம்.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல இசையமப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டுள்ளார்.

இது பற்றி இயக்குநர் மு.களஞ்சியம் பேசுகையில், "சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களிடம் வெளியிடக் கேட்டோம். எந்த மறுப்பும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்ததோடு அல்லாமல் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட ராசி.. இன்றுவரையிலும் ஏறக்குறைய இருபது லட்சம் பேர் எங்களது படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்வையிட்டுள்ளனர். அதோடு இல்லாமல் உலகம் முழுக்க உள்ள நண்பர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆணவக் கொலை பற்றிய பதிவாக இந்த முந்திரிக்காடு திரைப்படம் இருக்கும். அதை மையப்படுத்திதான் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வடிவமைக்கப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது…" என்றார்.