full screen background image

“அடுத்தது பிடிவாரண்ட்டுதான்” – கங்கனா ரணாவத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

“அடுத்தது பிடிவாரண்ட்டுதான்” – கங்கனா ரணாவத்துக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

“அடுத்த வாய்தாவின்போது நீதிமன்றத்தில் ஆஜராகவில்லையென்றால் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்…” என்று மும்பை நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

பாலிவுட்டின் கதாசிரியரும், பாடலாசிரியருமான ஜாவேத் அக்தரைப் பற்றி நடிகை கங்கனா ரணாவத் ஒரு பேட்டியில் தரக்குறைவாகப் பேசியிருந்தார். இந்தப் பேட்டியினால் கோபம் கொண்ட ஜாவேத் அக்தர், கங்கனா மீது மும்பை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் ஆஜராகும்படி கங்கனாவுக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கங்கனா ஆஜராகததால் கோபம் கொண்ட நீதிபதி, அவர் தரப்பு வழக்கறிஞரிடம், “அடுத்த முறை கங்கனா கண்டிப்பாக நேரில் ஆஜாராக வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயமாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும்…” என எச்சரித்துள்ளார் நீதிபதி.

Our Score