full screen background image

டிவிக்களில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தமிழ்த் திரைப்படங்கள்

டிவிக்களில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தமிழ்த் திரைப்படங்கள்

இந்த வருடத்திய சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகவும் வந்துவிட்டதால் தொலைக்காட்சி நிறுவனங்கள் கொஞ்சம் மூச்சுவிட்டுள்ளன.

வேறு நாட்களில் ஆகஸ்ட் 15 வந்திருந்தால் அன்றைக்கு ஒரு புதிய படத்தை வெளியிட்டு பின்பு அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கு வேறொரு புதிய படத்தை போட வேண்டிய கட்டாயம் வந்திருக்கும். இந்த வருஷம் தப்பித்தோம் என்கிறார்கள்.

இந்த வருட சுதந்திர தின ஸ்பெஷலாக விஜய் டிவியில் திரிஷா நடித்த ‘பரமபதம்’, மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பூமிகா’ இரண்டும் வெளியாகவுள்ளன. அமலா பால் நடித்த ‘அதோ அந்தப் பறவை போல’ படமும் லிஸ்ட்டில் காத்துக் கொண்டிருக்கிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘கர்ணன்’ ஒளிபரப்பாகும் என்று தெரிகிறது.

இதேபோல் வரும் விஜயதசமி பண்டிகை திருநாட்களில் என்ன படங்களை வெளியிடுவது என்று சேனல்களுக்குள் இப்போதே முட்டல், மோதல் உருவாகிவிட்டது.

கார்த்தியின் ‘சுல்தான்’, சிம்புவின் ‘ஈஸ்வரன்’ இரண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ளது.

விஜய் சேதுபதி நடித்திருக்கும் ‘துக்ளக் தர்பார்’ சன் தொலைக்காட்சியில் அன்றைக்கு வெளியாகும் என தெரிகிறது.

இதேபோல் ‘கமலி பிரம் நடுக்காவேரி’, ‘வக்கீல் சாப்’, ‘காடன்’, ‘ஒரு பக்கக் கதை’ ஆகிய படங்கள் ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளன.

வரும் தீபாவளியன்று சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகலாம்.

‘ஜெகமே தந்திரம்’ அல்லது ‘சார்பட்டா பரம்பரை’ இந்த இரண்டில் ஒன்று தீபாவளியன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தீபாவளியன்று ‘நரகாசூரன்’ வெளியாகும் என்று தெரிகிறது.

இதே நேரம் நவராத்திரி பண்டிகை நாளில் வலிமை’ படமும், தீபாவளியன்று ‘அண்ணாத்த’ திரைப்படமும் தியேட்டர்களில் வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

 
Our Score