தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா, வெற்றி பட இயக்குநர் S.P.முத்துராமன் மற்றும் ‘புரட்சி இயக்குநர்’ S.A.சந்திரசேகர் ஆகிய மும்மூர்த்திகளும் இணைந்து ‘மூன்றாம் மனிதன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
இந்தப் படத்தை ராம்தேவ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இணை தயாரிப்பினை டாக்டர் எம்.ராஜகோபாலன், டாக்டர் டி.சாந்தி ராஜகோபாலன் டாக்டர் பி.அழகுராஜா, மதுரை சி.ஏ.ஞானோதயா ஆகியோர் செய்துள்ளனர்.
இந்தப் படத்தில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், ஸ்ரீநாத், சூது கவ்வும் சிவக்குமார், பிரணா மற்றும் Dr. ரிஷிகாந்த், ராம்தேவ் Dr.ராஜகோபாலன், மதுரை ஞானம் ஆகியோர் நடிக்கின்றனர்.
பாடலுக்கான இசையை வேணு சங்கர், தேவ்ஜி அமைத்து இசை அமைப்பாளர்களாக அறிமுகமாகின்றனர். பின்னணி இசையை பி.அம்ரிஷ் என்ற புதுமுகம் அமைக்கிறார். படத் தொகுப்பினை துர்காஸ் கவனிக்க, கலை இயக்குநராக டி.குணசேகர் கவனித்துள்ளார்.
‘பழகிய நாட்கள்’ என்ற கதையோடு கருத்துள்ள படத்தை இயக்கிய இயக்குநர் ராம்தேவ், இந்த மூன்றாம் மனிதன் படத்திற்கும் கதை, பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.
சஸ்பென்ஸ், த்ரில்லருடன் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவிக்குள் நடக்கும் அன்றாட பிரச்னைகளும் இதில் அலசப்பட்டிருக்கிறது.
இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் இந்தப் படத்தில் துப்பறியும் அதிகாரியாக பிரதான வேடத்தில் நடிக்கிறார். ஏற்கனவே ‘ருத்ரா’ என்ற படத்தில் புத்திசாலித்தனமாக துப்பறிந்து போலீசுக்கு ஐடியா கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் திருடன் கதாபாத்திரமாக அது அமைந்திருந்தது. ஆனால் இந்த ‘மூன்றாம் மனிதன்’ படத்தில் எந்தவித சாட்சியமும் இல்லாமல் மர்மமாக நடக்கும் ஒரு கொலையை துல்லியமாக பலவித டிடெக்டிவ் வேலைகள் செய்து கண்டுபிடிக்கும் சுவராஸ்யமான துப்பறியும் அதிகாரி கதாபாத்திரத்தில் கே.பாக்யராஜ் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடந்துள்ளது.
இப்படத்தில் இடம் பெறும் ‘மல்லிப்பூ வச்சி வச்சி வாடுதே’ புகழ் மதுஸ்ரீ அவர்கள் பாடிய பாடல் முதல் பாடலாக வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ‘மூன்றாம் மனிதன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ்த் திரையுலகத்தின் மூத்த இயக்குநர்களான, எஸ்.பி.முத்துராமன், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.