‘மூடர்கூடம்’ படத்தில் அறிமுகமான ராஜாஜி கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் ‘சதுரன்.’ இப்படத்தை குபேரன் சினிமாஸ் சார்பில் குபேரன் P.பொன்னுச்சாமி தயாரிக்கிறார்.
கதாநாயகியாக வர்ஷா அறிமுகமாகிறார். மற்றும் காளி வெங்கட், கயல் தேவராஜ், இயக்குநர் ராஜூ ஈஸ்வரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் ஒளிப்பதிவு மோனிக்குமார்.ஜி இவர் ஹாலிவுட் படங்களான ‘ஸ்லம்டாக் மில்லினியர்’, ‘மரியான்’, ‘கோஸ்ட் புரோடோகால்’ போன்ற படங்களில் இணை ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர். இந்த படத்திற்கு ஏ.கே.ரிஷால்சாய் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு- சுரேஷ் அர்ஸ். வசனம் – ஜி.ராதாகிருஷ்ணன். பாடல்கள் – யுகபாரதி, முத்தமிழ். நடனம் – தீனா, நந்தா. ஸ்டண்ட் – கே.கணேஷ்குமார் கலை – பழனிவேல், நிர்வாகத் தயாரிப்பு – அண்ணாமலை. இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளரான K.ராஜீவ் பிரசாத் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார்.
சென்னையில் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் ஹீரோ, ஜனனி என்ற பெண்ணை காதலிக்கிறான். அவள் மனதில் இடம் பெற முயற்சிக்கும் வேலையில், உதவும் மனப்பான்மை கொண்ட நாயகன் சட்ட விரோத கும்பலின் சதியில் தானாக மாட்டிக் கொள்ள, அதனால் தன்னுடைய நண்பர்களுக்கும் ஆபத்து இருப்பதை உணர்ந்து அவர்களைக் காப்பாற்ற போராடும் திகில் நிறைந்த பொழுதுபோக்கான படம்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் இரவில் நடப்பதால் சென்னை நகரத்தின் முக்கியமான சாலைகளில் சென்னையின் இருண்ட பகுதிகளை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் படமாக அமைகிறது இந்த ‘சதுரன்’.









