full screen background image

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முன்று மொழிகளில் தயாராகும் படத்தில் நடிகை ஸ்ரீதேவி நடிக்கிறார்..!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முன்று மொழிகளில் தயாராகும் படத்தில் நடிகை ஸ்ரீதேவி நடிக்கிறார்..!

பல படங்களில் தன்னுடைய ஆழமான நடிப்பாலும், அழகாலும் அனைவரையும் வசீகரித்தவர் நடிகை ஸ்ரீதேவி. லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக் காதலியாக திகழ்ந்த ஸ்ரீதேவி தன்னுடைய திருமணத்திற்கு பின்பு நீண்ட வருடங்கள் திரைக்கு வராமலேயே இருந்தார்.

அந்த ஓய்வுக்கே ஓய்வு கொடுத்துவிட்டு சில ஆண்டுகளுக்கு முன்பாக ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற இந்தி படத்தில் மீண்டும் நடித்தார். அது மாபெரும் வெற்றியடையவே.. பல்வேறு மொழிகளிலும் மீண்டும் நடிக்கத் துவங்கினார். அதன்படியே தமிழில் இளஷைய தளபதி விஜய்யுடன், ‘புலி’  படத்திலும் நடித்தார்.

தற்போது ‘மாம்’(அம்மா) எனும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.  இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தை ஸ்ரீதேவியின் கணவரான தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க அறிமுக இயக்குநர் ரவி உதயவார் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீதேவியுடன், அக்சய் கண்ணா, நவாஸுதீன், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைப் புயல் ஏ.ஆர்.ரஹமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் போஸ்டரை நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி இணையதளத்தில் வெளியிட்டனர்.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த ‘மாம்’(அம்மா) திரைப்படத்தை வரும் ஜூலை 14-ம் தேதி Zee ஸ்டுடியோஸ் உலகமெங்கும் வெளியிடுகின்றது.

Our Score