ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மோ’ திரைப்படம்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘மோ’ திரைப்படம்

WTF என்டர்டெயின்மென்ட் மற்றும் மூமண்ட் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் புதிய படம் ‘மோ’.

தமிழ் திரையுலகில் காமெடி கலந்த திகில் படங்கள் அதிகம் வந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில், வித்தியாசமான தலைப்பு கொண்டு ‘மோ’ என்கிற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகியுள்ளது.

இத்திரைப்படத்தில் சன் மியூசிக் சேனலின் வர்ணனையாளரான(VJ) சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, ‘காக்கா முட்டை’ மற்றும் பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், ‘சூது கவ்வும்’, ‘நேரம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த ரமேஷ் திலக், ‘யுத்தம் செய்’, ‘முகமூடி’ மற்றும் பல படங்களில் நடித்த ‘செல்வா’, ‘முன்டாசுபட்டி’ படத்தில் நடித்த ராமதாஸ் (முனீஸ்காந்த்), யோகி பாபு, ‘மெட்ராஸ்’ மற்றும் ‘மாரி’ படங்களில் நடித்த ‘Mime” கோபி, ‘ராஜதந்திரம்’ படத்தில் நடித்த சிவா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை புவன் நல்லான்.R என்னும் புதுமுக இயக்குநர் இயக்கியுள்ளார். இவர் இயக்குநர்கள் செல்வா மற்றும் ஹோசிமின் ஆகியோரிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர்.  ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமனியமிடம் இணை ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த விஷ்ணுஸ்ரீ.கே ஒளிப்பதிவு செய்ய, ‘இனிமே இப்படிதான்’ திரைப்படத்தின் இசை அமைப்பாளரும், A.R.ரகுமானின் உதவியாளருமான சமீர்.d.சந்தோஷ் இசையமைக்கிறார். கலை – பாலசுப்ரமணியம், படத் தொகுப்பு – கோபிநாத்.

இப்போது படப்பிடிப்பை முடிந்து, இறுதி கட்ட பணிகள் நடந்து வருகின்றன. 

Our Score