full screen background image

அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர்-1’ திரைப்படம் 2024 பொங்கல் தினத்தில் வெளியாகிறது!

அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர்-1’ திரைப்படம் 2024 பொங்கல் தினத்தில் வெளியாகிறது!

லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன், ஹெட் ஆஃப் லைகா புரொடக்‌ஷன்ஸ் ஜி.கே.எம். தமிழ்குமரன் தயாரிப்பில், இயக்குநர் விஜய் இயக்கத்தில், அருண் விஜய் நடித்துள்ள ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ திரைப்படம் 2024, பொங்கல் விடுமுறை தினத்தில் வெளியாகிறது..!

இந்தப் படத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபி ஹாசன், பரத் போபண்ணா, பேபி இயல், விராஜ் எஸ், ஜேசன் ஷா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இயக்கம் – விஜய், லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் – ஜி.கே.எம்.தமிழ்குமரன், தயாரிப்பு – சுபாஸ்கரன், எம்.ராஜசேகர் மற்றும் எஸ்.சுவாதி, இணை தயாரிப்பு – சூர்யா வம்சி பிரசாத் கோதா- ஜீவன் கோத்தா, இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், கதை & திரைக்கதை – ஏ.மகாதேவ், வசனம் – விஜய், ஒளிப்பதிவு – சந்தீப் கே.விஜய், படத்தொகுப்பு – அந்தோணி, சண்டை இயக்கம் – ஸ்டண்ட் சில்வா, கலை இயக்கம் – சரவணன் வசந்த், ஆடை வடிவமைப்பு – ருச்சி முனோத், ஒப்பனை – பட்டணம் ரஷீத், நிர்வாகத் தயாரிப்பு – வி.கணேஷ், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர் – கே.மணி வர்மா, நிர்வாகத் தயாரிப்பாளர்கள்(யுகே) – சிவகுமார், சிவ சரவணன், தயாரிப்பு நிர்வாகம் – மனோஜ் குமார்.கே, ஆடை வடிவமைப்பு – மொடப்பள்ளி ரமணா, ஒலி வடிவமைப்பு – எம்.ஆர்.ராஜகிருஷ்ணன், VFX – D நோட், புகைப்படங்கள் – ஆர்.எஸ்.ராஜா, Promotion & Strategies – ஷியாம் ஜாக், பத்திரிக்கை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன், விளம்பர வடிவமைப்பு – பிரதூல் என்.டி.

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் ‘மிஷன் சாப்டர்1: அச்சம் என்பது இல்லையே’ படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

பாராட்டும்படியான படைப்புகளை சரியானத் திட்டமிடலுடன் கொடுக்கக் கூடிய இயக்குநர் விஜய்யின் திறமை, அவரைத் தயாரிப்பாளர்களுக்கு பிடித்தமான இயக்குநராக மாற்றி இருக்கிறது. 70 நாட்களில் அவர் சென்னை மற்றும் லண்டனில் இதன் படப்பிடிப்பை முடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இதன் டீசர் பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதிரடியான ஆக்‌ஷன் காட்சிகளோடு தொடங்கி உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளோடு முடிந்திருக்கிறது இந்த டீசர்.

இந்தப் படத்தின் விநியோக உரிமையை லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. படம் 2023 பொங்கல் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது என்பதைப் படக் குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

நான்கு வெவ்வேறு மொழிகளில் இந்தப் படத்தை வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. படத்தின் ட்ரைய்லர், ஆடியோ வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Our Score