full screen background image

விரைவில் வெளியாகிறது ‘எமகாதகன்’ திரைப்படம்!

விரைவில் வெளியாகிறது ‘எமகாதகன்’ திரைப்படம்!

அறிமுக இயக்குரான கிஷன் ராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் எமகாதகன்’.

இத்திரைப்படத்தை சிங்கப்பூரை சேர்ந்த தயாரிப்பாளர் கிருஷ்ணமணி கண்ணன் பிரைம் ரீல் பிக்சர்ஸ் சார்பாக தயாரித்துள்ளார். விக்னேஷ் ராஜா இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தில் கார்த்திக், மனோஜ், ராஷ்மிதா ஹிவாரி, சதிஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

முழுக்க, முழுக்க புதுமுகங்களை கொண்டு மட்டுமே இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது. 

மதுரை மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் படப்பிடிப்பு நடந்துள்ளது.

இத்திரைப்படம் நமது மண் மற்றும் மரபு சார்ந்த விஷயங்களின் பின்னணியில் ஒரு வலுவான கதைக் களத்தை கொண்டு உருவாகி இருக்கிறது. 

மிகக் குறுகிய காலத்தில் திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு சில நாட்களுக்கு முன்பு பிரசாத் லேபில் நடைபெற்றது.     

இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் முன்னோட்டம் ஜீ மியூசிக்கில் வெளியாகி  பல லட்சம் பார்வையாளர்களை தாண்டி வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது.

விரைவில் இத்திரைப்படம் திரைக்கு வரும் என்று படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Our Score