full screen background image

‘மிடில் கிளாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது..!

‘மிடில் கிளாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது..!

Axess Film Factory நிறுவனத்தின் தயாரிப்பாளரான G.டில்லிபாபுவின் தயாரிப்பில் இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில் நடிகர் முனிஷ்காந்த் நடிக்கும் நடிக்கும் மிடில் கிளாஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது.

தமிழ் திரையுலகில் வித்தியாசமான களங்களில், சிறந்த கதையம்சம் கொண்ட பொழுது போக்கு படங்களை வழங்கியதன் மூலம், மிகச் சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் Axess Film Factory நிறுவனத்தின் தயாரிப்பாளரான G.டில்லி பாபு.

இவர் அடுத்ததாக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், நடிகர் முனிஷ்காந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் மிடில் கிளாஸ்’ என்ற படத்தைத் தயாரிக்கிறார்.

இப்படத்தில் விஜயலட்சுமி அகத்தியன், ராதாரவி, மாளவிகா அவினாஷ், வேல. ராமமூர்த்தி, வடிவேல் முருகன் (கோடாங்கி), குரைஷி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். சுதர்சன் சீனிவாசன் (ஒளிப்பதிவு), சந்தோஷ் தயாநிதி (இசை), M.S.P.மாதவன் (கலை), ஷான் லோகேஷ் (படத் தொகுப்பு), டான் அசோக் (சண்டை பயிற்சி இயக்கம்), கார்த்திக் நேத்தா & கதிர்மொழி (பாடல் வரிகள்), S.S.ஸ்ரீதர் (தயாரிப்பு நிர்வாகி), வின்சி ராஜ் (வடிவமைப்பு),J.நந்தா (உடைகள்), வினோத் சுகுமார் (ஒப்பனை), ராஜேந்திரன் (புகைப்படங்கள்), DEC – டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் (புரமோஷன் & டிஜிட்டல் மார்க்கெட்டிங்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), K.V.துரை (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்).

இத்திரைப்படம் நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்வவங்களை மையப்படுத்தி, அசத்தலான பொழுதுபோக்கு குடும்ப டிராமா திரைப்படமாக உருவாகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பினை இன்று காலை திரைப்பட இயக்குநர் ராம்குமார் தனது குரலில் ‘ஆக்ஷன் கேமரா ரோல்’ கூறி முதல் ஷாட்டைத் தொடங்கி வைக்க, பேச்சிலர்’ புகழ் இயக்குநர் சதீஷ் கிளாப் போர்டு தட்டி இப்படப்பிடிப்பை துவக்கி வைத்தனர்.

நடிகர் முனிஷ்காந்தை முண்டாசுப்பட்டி’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குர் ராம்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

முனிஷ்காந்த் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘மிடில் கிளாஸ்’ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டது இனிமையான தருணமாக அமைந்திருந்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலில் முடிக்க படக் குழு திட்டமிட்டுள்ளது.

Our Score