full screen background image

முனீஷ்காந்த் நாயகனாக நடிக்கும் ‘மிடில் கிளாஸ்’ படம் துவங்கியது

முனீஷ்காந்த் நாயகனாக நடிக்கும் ‘மிடில் கிளாஸ்’ படம் துவங்கியது

தமிழ் திரையுலகில் வித்தியாசமான களங்களில், சிறந்த கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு படங்களை வழங்கியதன் மூலம், மிகச் சிறந்த தயாரிப்பாளர் என்ற பெயரை பெற்றிருக்கிறார் Axess Film Factory  தயாரிப்பாளர் G.டில்லி பாபு.

அவரது தயாரிப்பில் மரகத  நாணயம்’, ‘ராட்சசன்’, ‘ஓ மை கடவுளே’, ‘பேச்சிலர்’ போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்களாக மாறிய நிலையில், அடுத்ததாக ‘கள்வன்’, ‘மிரள்’ போன்ற பல நம்பிக்கைக்குரிய படங்களை தயாரித்து வருவது, ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து தற்போது தனது அடுத்த படைப்பாக ‘மிடில் கிளாஸ்’ என்ற திரைப்படத்தினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படத்தில் முனிஷ்காந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜயலட்சுமி அகத்தியன், ராதாரவி, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி, வடிவேல் முருகன் (கோடாங்கி), குரேஷி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – சுதர்சன் சீனிவாசன், இசை – சந்தோஷ் தயாநிதி, கலை இயக்கம் – M.S.P.மாதவன், படத் தொகுப்பு – ஷான் லோகேஷ், சண்டை பயிற்சி இயக்கம் – டான் அசோக், பாடல்கள் – கார்த்திக் நேத்தா & கதிர்மொழி, இணை தயாரிப்பு – K.Poornesh, தயாரிப்பு நிர்வாகம் – S.S.ஸ்ரீதர், தயாரிப்பு வடிவமைப்பு – வின்சி ராஜ், உடைகள் – J.நந்தா, ஒப்பனை – வினோத் சுகுமார், புகைப்படங்கள் – ராஜேந்திரன், பத்திரிகை தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D’One, கிரியேட்டிவ் தயாரிப்பாளர் – K.V.துரை.

இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.

இந்த ‘மிடில் கிளாஸ்’ திரைப்படம் நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்வவங்களை மையப்படுத்தி, அசத்தலான பொழுதுபோக்கு குடும்ப டிராமா திரைப்படமாக உருவாகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் 27 அன்று தொடங்கி, ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Our Score