இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய படம் ‘எம்.ஜி.ஆர். மகன்’..!

இயக்குநர் பொன்ராமின் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய படம் ‘எம்.ஜி.ஆர். மகன்’..!

ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் 'எம்.ஜி.ஆர். மகன்.'

இந்தப் படத்தில் சசிகுமார் நாயகனாகவும், மிருணாளினி ரவி நாயகியாகவும் நடிக்கவுள்ளனர். நாயகிக்கு இதுதான் முதல் தமிழ்த் திரைப்படம். மேலும், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, சிங்கம் புலி ஆகியோரும் நடிக்கின்றனர்.

இந்தப் படத்துக்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி தாசன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் படத் தொகுப்புப் பணிகளையும், துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரியவுள்ளனர்.

mgr-magan-poojai-stills-2

சரவணன் தயாரிப்பு நிர்வாகியாகவும், சித்தார்த், செந்தில்குமார் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணிபுரிகிறார்கள்.

இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் பொன்ராம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனியில் இன்று துவங்கியது.