எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் இசை வெளியானது.

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் இசை வெளியானது.

பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றினை ‘காமராஜ்’ என்ற பெயரில்  திரைப்படமாக  தயாரித்து வெளியிட்ட  ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தற்போது மக்கள் திலகம்  எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றினை ‘எம்.ஜி.ஆர்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகிறது.

எம்.ஜி.ஆரைப் போன்றே முகத்தோற்றம் கொண்ட பிரபல விளம்பரப்பட நாயகன் சதீஷ்குமார் எம்.ஜி.ஆர். பாத்திரத்தில் நடிக்கிறார். எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாவாக நடிகை ரித்விகா நடித்திருக்கிறார். எம்.ஆர்.ராதாவாக பாலாசிங், இயக்குநர் பந்துலுவாக Y.G.மகேந்திரன், எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்கரபாணியாக மலையாள நடிகர் ரகு, பாய்ஸ் நாடக கம்பெனி உரிமையாளராக தீனதயாளன், உயிர் தொண்டனாக வையாபுரி ஆகியோர் நடித்துள்ளனர்.

mgr-1

ஆனையடி பள்ளியில் படித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் கல்வி வறுமையால் தடைபட்டு நாடகக் கம்பெனியில் சேரும் நிலை ஏற்பட்டது. அப்போது அந்த நாடக கம்பெனி முதலாளி, சிறுவன் தங்க விக்ரகம் போல் இருக்கிறான் எனக் கூறினாராம். எனவே இந்த படத்திற்கு அது போன்ற ஒரு சிறுவனுக்கான தேர்வு நடைபெற்றது. இறுதியில் அத்வைத் என்ற சிறுவன் தேர்வு செய்யப்பட்டு எம்.ஜி.ஆரின் பால்ய கால வேடத்தில் நடித்திருக்கிறான்.

மறைந்த முன்னால் முதல்வர்கள், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் பாத்திரங்களில் நடிக்க பொருத்தமான நடிகர்,  நடிகையர் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஏ.எம்.எட்வின் சகாய் ஒளிப்பதிவு செய்ய, செம்பூர் ஜெயராஜ் திரைக்கதை, வசனம் எழுத, எஸ்.பி.அகமது படத்தொகுப்பு செய்கிறார். ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக அ.பாலகிருஷ்ணன் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார்.

DSC_0342

இந்தப் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் H.V.ஹண்டே, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர்.பி.வேணுகோபால், டாக்டர் பழனி பெரியசாமி, சத்யபாமா கல்லூரி துணைவேந்தர் லீனா மரியா ஜான்சன், கவிஞர் பூவை செங்குட்டுவன், நடிகை லதா, மக்கள் குரல் ஆசிரியர் ஆர்.முத்துகுமார், துரைகருணா, இயக்குனர் ஆதவன், எம்.ஜி.ஆராக நடித்துள்ள சதீஷ், பாலாசிங், மாஸ்டர் அத்வைத் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த படத்தின் டிரைலரை H.V.ஹண்டே வெளியிட சைதை துரைசாமி பெற்றுக் கொண்டார். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் படத்தின் இயக்குநர் அ.பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

Our Score