நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் 96 இயக்குநர் பிரேம்குமார் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.
இந்தப் படத்தில் இன்னொரு மிக முக்கியமான கேரக்டரில் அரவிந்த்சாமி நடிக்கிறார். மேலும், ராஜ்கிரண், ஶ்ரீதிவ்யா, சுவாதி கொண்டே, தேவதர்ஷ்னி, ஜெயபிரகாஷ், ஶ்ரீரஞ்சனி, இளவரசு, கருணாகரன், சரண், ரேச்சல் ரெபேகா, அந்தோணி, ராஜ்குமார், இந்துமதி, ராணி சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
தயாரிப்பு : ஜோதிகா மற்றும் சூர்யா, இணை தயாரிப்பு : ராஜ்சேகர் கற்பூரசுந்தரபாண்டியன், ஒளிப்பதிவு : மகேந்திரன் ஜெயராஜு, படத்தொகுப்பு – ஆர்.கோவிந்தராஜ், புரொடக்ஷன் டிசைனர் : ராஜீவன், பாடல்கள் : கார்த்திக் நேத்தா, உமாதேவி, ஒப்பனை – வி.முருகன், VX : எஸ்.அழகிய கூத்தன்,-சுரேன்.ஜி, VFX : பாந்தம் ஸ்டுடியோஸ், DI : ஐஜின், கலரிஸ்ட் : ராஜசேகரன்.K.S, Sync Sound : ராகவ் ரமேஷ், புகைப்படங்கள் – ஆகாஷ், பத்திரிக்கை தொடர்பு : ஜான்சன்.
இப்படத்தை, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து சூப்பர் ஹிட்டான #’96’ படத்தை இயக்கம் செய்த ச.பிரேம் குமார் இயக்குகிறார். அவரே கதை, திரைக்கதை, வசனமும் எழுதுகிறார். ‘96′ படம் மூலம் மெகா ஹிட்டான பாடல்களை தந்த இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா, மீண்டும் டைரக்டர் ச. பிரேம்குமாருடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம், சிவகங்கை பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெற்று முடிவடைந்தது. தற்போது படத்தின் எடிட்டிங், டப்பிங் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
இத்திரைப்படம் பற்றி இணை தயாரிப்பாளர் – ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கூறுகையில், “கார்த்தி மற்றும் அரவிந்த் ஸ்வாமி இருவரும் தங்களது சிறந்த நடிப்பை தந்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இறுதி வடிவத்தை கண்ட இயக்குநர் பிரேம் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நமது சொந்தங்களின் முக்கியத்துவத்தையும், பண்பாட்டு வேர்களையும் வலியுறுத்தக்கூடிய ஒரு நல்ல குடும்பப் படமாக இது இருக்கும்” என்றார்.
கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.










