full screen background image

நடிகர் கார்த்தியின் பிறந்த நாளுக்காக இரத்த தானம் செய்த அவரது ரசிகர்கள்!

நடிகர் கார்த்தியின் பிறந்த நாளுக்காக இரத்த தானம் செய்த அவரது ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்களாக மட்டுமில்லாமல், மாவட்டம்தோறும் பொதுமக்களுக்கு பல நல்ல காரியங்களை செய்தும் வருகிறார்கள்.

இன்று, மே 25-ம் தேதி நடிகர் கார்த்தி தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடினார். இவரது இன்றைய பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடந்த இரத்த தான முகாமில் கார்த்தியின் ரசிகர்கள் சுமார் 150 பேர் இரத்த தானம் செய்தார்கள்.

மேலும் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் இன்று பிறந்த 100 குழந்தைகளுக்கு உடை மற்றும் தாய்மார்களுக்கு பரிசு பெட்டகம் கொடுத்து இருக்கிறார்கள்.

கார்த்தியின் ரசிகர்கள் கடந்த இரண்டு வாரங்களாக அன்னதானம், நீர் மோர் வழங்குதல், ஆகிய நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
Our Score