லிபி சினி கிராப்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.என்.ரஞ்சித்குமார் தயாரித்துள்ள படம் ‘மீண்டும் வா; அருகில் வா’.
இதில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ புகழ் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் மற்றொரு கதாநாயகனாக ஆரவ், கதாநாயகியாக சாரா தேவா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ஓளிப்பதிவு – கே. பி. பிரபு, இசையமைப்பாளர்கள் – விவேக், ஜேஷ்வந்த், பாடல்கள் – பிரகாஷ் பிரன்சிஸ், கலை – J.பார்த்திபன், மக்கள் தொடர்பு – நிகில், உடைகள் – சுந்தரி திவ்யா, சண்டை பயிற்சி – ரிவென்ஜ் ரஞ்சன். இயக்கம் – ஜெ.ஜெயராஜேந்திரசோழன்.
இத்திரைப்படத்தில் பங்கு கொண்ட அனைவருமே ஏறத்தாழ புதுமுகங்கள்தான். அறிமுக கலைஞர்கள்தான்.
முதல் முறையாக கிளைமேக்ஸுக்குப் பின்பாக கதையின் கருவை வெளிப்படுத்தும், முற்றிலும் புதிதான கதை, திரைக்கதையுடன் கூடிய இந்த ‘மீண்டும் வா அருகில் வா’ திரைப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய முயற்சி.
இசை விரும்பிகளுக்கும், இளம் தலைமுறையினருக்கும் பிடிப்பூட்டும் வகையில் இவ்வருடத்தின் மிக அழகிய மெல்லிசை பாடல்களையும் இப்படம் கொண்டுள்ளது.
ஏராளமான திகில் மற்றும் வேறு வகை என்ற பெயரில் வெளியாகும் படங்களின் வரிசையில் சற்றே மாறி, ஒரு முழுமையான திகில் / ஹாரர் வகை படமாக ‘மீண்டும் வா அருகில் வா’ படம் பேசப்படும் என்பதில் சந்தேகமில்லை.