சித்ரம் ஸ்கிரீன்ஸ் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஒயிட் ஹார்ஸ் எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘மீன்’.
புலனாய்வு இதழியலின் பின்னணியை அடிப்படையாக்க் கொண்டு இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். இயக்குநர் தரணியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஹரி பாஸ்கரன் ரத்னம் இப்படத்தை இயக்குகிறார்.
ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் டிரிஸ்டன் அல்ரிச் இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். வசனம் மற்றும் பாடல்களை கபிலன் வைரமுத்து எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கிறார்.
படத்தின் முக்கிய இரு கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும்விதமாக இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் டிஸைன் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் கபிலன் வைரமுத்துவே வசனம் பேசியுள்ளார். இந்த மீன் படத்தில் நடிக்கவிருப்பவர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களின் பட்டியல் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படுமாம்.