‘மாயா’ படத்தின் இயக்குநரான அஷ்வின் சரவணன் இன்றைய குமுதம் பத்திரிகையில் நயன்தாராவை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
“சின்ன வயசா வேற இருக்கீங்க. நயன்தாராவுக்கு இப்போ பசங்க மத்தில பெரிய கிரேஸ். நீங்க நயன்தாராவை நேர்ல சைட் அடிச்சீங்களா..?” என்ற உலக மகா கேள்விக்கு அடக்கமாகவே பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் அஷ்வின் சரவணன்.
அஷ்வின் சரவணன் நயன்தாரா பற்றி கூறுகையில், “பொதுவா நயன்தாரா கிளாமர் ஆர்ட்டிஸ்டுதான். ஆனா அவங்க அந்த எல்லையை மீறி நடிக்க்க் கூடிய ஹீரோயினும்கூட. எமோஷனல், சென்டிமெண்ட் சீன்ல அவங்கள அடிச்சுக்க நடிகைகள் இல்ல இப்போதைக்கு. நிஜத்துலகூட அவங்க நிறைய சென்டிமெண்ட் பார்க்குறவங்கதான்னு பிற்பாடு பழகும்போது புரிஞ்சுக்கிட்டேன்.
என் படம் முழுக்க பேயை மட்டும் தூக்கிக் காட்டி பயமுறுத்தும் வழக்கமான சினிமா இல்ல. இதுல ஒரு தாயா நயன்தாரவோட பெர்பார்மென்ஸ் பண்ண வேண்டிய இடங்கள் அதிகம். அதுல நிறைய ஸ்கோர் அவங்களால செய்ய முடியும்னு நம்பினோம்.
நா அவங்களை சந்திச்சு கதை சொல்லலாம்னு போனப்ப எனக்கு சில தயக்கங்கள் இருந்தது. முழுக் கதையையும் கேட்ட பிறகு அடுத்த நாளே நான் நடிக்கிறேன்னு சொன்னாங்க. நான் அப் கம்மிங் டைரக்டர். அவங்களுக்கு முன்ன பின்ன அறிமுகமே இல்லாத இயக்குநர். என்னை முழுசா நம்பி இறங்கி வந்தாங்க. இந்தப் பெரிய மனசு உள்ள ஹீரோயினை இந்தக் காலத்துல பார்க்குறது அரிது. அந்த அளவுல நான் வெரி லக்கி பெர்ஸன்.
இந்தப் படத்தோட டைட்டில் விஷயத்துல நயன்தாரா தலையிடவே இல்லை. அதோட அவங்க்கூட வேலை பார்க்குறதே செம எக்ஸ்பிரீயன்ஸ். நாம என்ன கேட்குறமோ அதையும் மீறி வேற எதுவும் குறுக்கிடாம செஞ்சு முடிச்சிட்டுப் போயிருவாங்க. நான் மேலோட்டமா நடிச்சுக் காட்டினதைக்கூட அவங்க தெளிவா முடிச்சுக் கொடுத்திருவாங்க.
வெளில ஆடியன்ஸா பார்க்குறப்ப எனக்கு அவங்க மேல பொதுவா பசங்களுக்கு இருக்குற ஈர்ப்பு இருக்குதா இல்லையான்னு தெளிவா சொல்லத் தெரியலை.
ஆனா, அவங்க்கூட நான் சேர்ந்து ஒர்க் பண்ணின அந்த 35 நாட்களை சத்தியமா என் வாழ்க்கைல மறக்கவே முடியாது. ஒரு இண்டிபெண்டண்ட் வுமன். பல போராட்டங்களுக்குப் பின்னாடி தைரியமா நிமிர்ந்து நிக்கும் தைரியசாலி. கடினமான உழைப்பாளி. இப்படித்தான் யோசிக்கத் தோணுது. ஒரு தனி மனுஷியா அவங்க இந்த இண்டர்ஸ்டிரில சமாளிச்சு இந்தளவுக்கு உயர்ந்திருக்காங்கன்னு யோசிக்கும்போது உண்மையில் ஜொள்ளுவிடத் தோணவே இல்ல..” என்று சொல்லியிருக்கிறார்.
இந்தம்மாவுக்கு மட்டும் எப்படித்தான் இப்படியான அடிமைகள்லாம் மாட்டுறாங்களோ தெரியலையே..?