ராஜஷந்ரு தயாரித்து, இயக்கி ஹீரோவாக நடித்து வரும் படம் மது மாது சூது. இத்திரைப்படத்தில் சிண்ட்ரல்லா சிண்ட்ரல்லா என்று துவங்கும் ஒரு பாடலை பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷும், அவரது மனைவியும் பாடகியுமான சைந்தவியும் ஜோடியாக பாடியுள்ளனர். இந்தப் பாடலை கவிஞர் பா.விஜய் எழுத, எங்கேயும் எப்போதும் படத்தின் இசையமைப்பாளர் சத்யா இசையமைத்திருக்கிறார்.
இப்பாடல் காதலித்து மணந்த புதுமணத் தம்பதிகளின் வாழ்க்கையைப் பற்றியது. இதேபோல் உண்மையான காதல் தம்பதிகளான ஜி.வி.பிரகாஷும், சைந்தவியும் பாடினால் நன்றாக இருக்குமே என்றெண்ணி அவர்களை அணுக.. அவர்களும் நட்புக்காகவே இந்தப் பாடலை பாடிக் கொடுத்துள்ளனர்..
இந்தப் பாடல் ஒலிப்பதிவின்போது எடுத்த புகைப்படங்கள் இங்கே :